உச்சம்தொடும் பெங்களூர் மக்கள்தொகை.. 2031ல் எவ்வளவு தெரியுமா? வார்னிங்.. வெடிக்கப்போகும் பிரச்சனை
பெங்களூர்: பெங்களூர் நகரில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல், சாலை பள்ளங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் நிலவி வருகிறது. இப்படியான சூழலில் மக்கள்தொகையையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தான் 2031ம் ஆண்டில் பெங்களூர் மக்கள்தொகை 1.47 கோடியை தொடும் என்றும், இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூர்... இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்று. கர்நாடகாவின் தலைநகராக இருக்கும் பெங்களூர் இந்தியாவின் ‛சிலிக்கான் சிட்டி' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு அங்கு இருக்கும் ஐடி நிறுவனங்கள் தான். பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் பெங்களூரில் உள்ளதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பெங்களூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இதனால் தற்போது பெங்களூரில் கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் நகரின் புறநகர் பகுதிகளில் மக்கள் குடியேறி வருகின்றனர். அதுமட்டுமின்றி புறநகர் பகுதிகள் பெங்களூரில் இணைக்கப்பட்டு வருகின்றன. அதிகப்படியான மக்கள்தொகை, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் உள்கட்டமைப்பு வசதிகளில் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
நகரின் முக்கியமான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மழை காலங்களில் சாலைகளில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் தனியார் ஐடி நிறுவனங்களுக்கும், அரசுக்கும் கடும் மோதல் போக்கு உள்ளது. உள்கட்டமைப்புகளை அரசு சரிசெய்வதில் அரசு அலட்சியம் காட்டுவதாக ஐடி நிறுவனங்களின் சிஇஓக்கள் உள்பட பெரிய பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் வெளிப்படையாக விமர்சனத்தை முன்வைக்கின்றன.
இது பெங்களூருவுக்கு சிக்கலாக மாறி உள்ளது. இப்படியான சூழலில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பெங்களூர் நகரின் மக்கள்தொகை கிடுகிடுவென அதிகரிக்க உள்ளதாக டிஇஎஸ் எனும் பொருளாதாரம் மற்றும் புள்ளியில் இயக்குநரகம் (Directorate of Economics and Statistics or DES) தெரிவித்துள்ளது.
இதுபற்றி அந்த இயக்குநரகம், ‛‛பெங்களூர் நகரின் மக்கள்தொகை கடந்த 2021ம் ஆண்டில் 1.22 கோடி என்று கணிக்கப்பட்டது. இது 2031ம் ஆண்டில் 1.47 கோடியாக உயர உள்ளது. கர்நாடகாவில் பெங்களூரில் மட்டும் 2025 முதல் 2026ம் ஆண்டில் மக்கள்தொகை உயர்வு 1.93 சதவீதமாக ஆக இருக்கும். அதேவேளையில் 2031ம் ஆண்டில் கர்நாடகா மக்கள்தொகையில் பெங்களூரில் மட்டும் 20 சதவீதம் பேர் இருப்பார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி பொருளாதாரம் மற்றும் புள்ளியல் இயக்குநரகத்தின் இயக்குநர் நரசிம்ம பானி கூறுகையில், ‛‛பெங்களூருவுக்கு ஒவ்வொரு ஆண்டும் புலம்பெயர்ந்து வருவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் தான் பெங்களூரில் மக்கள்தொகை அதிகரிக்கிறது. 2021ம் ஆண்டில் கர்நாடகா மக்கள்தொகையில் பெங்களூரில் மட்டும் 18.2 சதவீதம் பேர் இருந்தனர். இது இது 2031ம் ஆண்டில் 20.7 சதவீதமாக இருக்கும்'' என்றார்.
இது பெங்களூருவுக்கு வார்னிங்காக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நகரில் இடநெருக்கடி அதிகரிக்கும். காற்று, தண்ணீர் மாசு அதிகரிக்கும். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படலாம். புறநகர் பகுதிகளில் மக்கள் அதிகமாக குடியேறும்போது அங்கு அடிப்படை வசதிகளுக்கு பற்றாக்குறை வரலாம். இதனால் இந்த மக்கள்தொகை உயர்வால் பெங்களூரில் நெரிசலை குறைக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி புறநகர் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications