ஆளாளுக்கு தர்ம அடி.. அதென்ன சார் மக்களே சட்டத்தை கையில் எடுப்பது?.. போலீஸில் புகார் கொடுத்த திருடன்
பெங்களூர்: பெங்களூரில் வழிப்பறியில் ஈடுபட்டிருந்த ஒரு கொள்ளையனை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொள்ளையன் ஒற்றைக் காலில் நிற்கிறார்.
செப்டம்பர் 2ஆம் தேதி ரிச்மாண்ட் டவுன் என்ற பகுதியில் டாக்சி டிரைவரிடம் ரித்தேஷ் என்ற 18 வயது இளைஞர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது டிரைவர் பிரதீப்பிடம் கத்தியை காட்டி செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறிக்க திட்டமிட்டுள்ளாார். ஆனால் இந்த கொள்ளை சம்பவமோ ரித்தேஷுக்கு கைக் கூடவில்லை.

பிரதீப்
ஆம், ரித்தேஷை தள்ளிவிட்ட பிரதீப் ஓடி போய் பொதுமக்களின் உதவியை நாடினார். அப்போது அங்கு கூட்டமாக ரித்தேஷை சுற்றி வளைத்த பொதுமக்கள் அவரை தர்ம அடித்து கொடுத்து பின்னி பெடலெடுத்துள்ளனர். அப்போது தனது கையில் இருந்த கத்தியை காட்டி மிரட்டிய ரித்தேஷ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பிரதீப் கொடுத்த புகார்
இதையடுத்து டாக்ஸி டிரைவர் பிரதீப் கொடுத்த புகாரின் பேரில் திருடன் ரித்தேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான கையோடு தன்னை தாக்கிய பொதுமக்கள் மீதே ரித்தேஷ் புகார் கொடுத்துள்ளார். இதுதான் இந்த நிகழ்வின் சுவாரஸ்யம் ஆகும். அந்த புகாரில் திருட முயற்சித்த போது என் தலை, கை கால் முகத்தில் பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளார்கள்.

திருடன் சட்டம்
எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிய அந்த திருடன் சட்டத்தை மக்கள் கையில் எடுக்க கூடாது என்றும் அறிவுரை வழங்கியுள்ளாராம். போலீஸாரிடம் அவர் வழங்கிய புகாரில் ரிச்மண்ட் டவுனில் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி 4 மணிக்கு கத்தி முனையில் ஒரு டாக்ஸி டிரைவரிடம் கொள்ளையடிக்க முயற்சித்தேன். அப்போது அவர் எப்படியோ தப்பி பொதுமக்களின் உதவியை நாடினார்.

கொடூரமாக அடித்த ஆண்கள்
இவரது அலறல் சப்தம் கேட்டு 40 ஆண்கள் திரண்டு என்னை கொடூரமாக அடித்தனர். இதனால் எனக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சட்டத்தை எப்படி பொதுமக்கள் கையில் எடுக்கலாம் என அந்த புகாரில் கேட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் கூறுகையில் ஒரு புகார் மீது எஃப்ஐஆர் பதிவு செய்வது போலீஸின் கடமையாகும். பொதுமக்கள் இது போன்ற குற்றவாளிகளை பிடிக்க உதவ வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என தெரிவித்தனர்.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications