பெங்களூருவில் இப்படி ஒரு காதலியா? விடிய விடிய வாட்ஸ்-அப் வீடியோ கால்! பேரதிர்ச்சியில் ஐடி இன்ஜினீயர்
பெங்களூரு: பெங்களூருவில் டேட்டிங் செயலியில் மலர்ந்த காதலால் சாப்ட்வேர் இன்ஜினீயருக்கு நேர்ந்த விபரீதம் ஒட்டுமொத்த ஐடி வட்டாரத்தையும் உலுக்கியுள்ளது. திருமண ஆசை காட்டி வருங்கால கணவரையே நம்பவைத்து, அந்த இளம்பெண் அரங்கேற்றிய துணிகர செயலும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களின் பின்னணியில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி பின்னணி குறித்த தகவலும் இப்போது வெளியாகி உள்ளது.. இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
டேட்டிங் செயலி மூலம் பழகி, சாப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவரிடம் சுமார் 1.66 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்துவிட்டு இளம்பெண் ஒருவர் எஸ்கேப் ஆகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு தென்கிழக்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சவுரப் துபே. கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், அங்குள்ள ஒரு முன்னணி தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி மொபைலில் உள்ள பிரபல 'டேட்டிங்' செயலி மூலமாக ரியா அகர்வால் என்ற இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் சாதாரணமாக தொடங்கிய இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தி காதலாக மாறியுள்ளது.
வாட்ஸ்-அப் வீடியோ கால் லவ்
நாட்கள் செல்ல செல்ல சவுரப் மற்றும் ரியா ஆகிய 2 பேரும் தங்களது தனிப்பட்ட செல்போன் நம்பர்களை பரிமாறிக் கொண்டு தினமும் பேசி வந்துள்ளனர். அதுமட்டுமின்றி, தினமும் வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு மூலமாகவும் நீண்ட நேரம் பேசி தங்களது காதலை வளர்த்துள்ளனர். ஒருகட்டத்தில் சவுரப்பை கல்யாணம் செய்து கொள்ள ரியா விருப்பம் தெரிவித்துள்ளார்.
வருங்கால மனைவி கிடைக்கப் போகும் மகிழ்ச்சியில் சவுரப்பும் இதற்கு உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இருவரும் தங்களது குடும்பத்தினரிடம் பேசிவிட்டு, முறைப்படி திருமணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்ய தயாராகினர்.
வலை விரித்த இளம்பெண்
திருமண ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, இதற்கிடையில் ரியா தனது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கியுள்ளார். தான் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் பெருமளவில் பணம் முதலீடு செய்து வருவதாகவும், அதன் மூலம் தனக்கு மிகக் குறுகிய காலத்தில் அதிக அளவில் லாபம் கிடைத்து வருவதாகவும் சவுரப்பிடம் ரியா ஆசையாக கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் நாம் 2 பேரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதால், சவுரப்பையும் இந்த ஆன்லைன் பிசினஸில் பெருமளவு முதலீடு செய்யும்படி அவர் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.
ரூ.1.66 கோடி முதலீடு
தன்னை திருமணம் செய்து கொள்ளப் போகும் வருங்கால மனைவி, இப்படி ஆசையாக வற்புறுத்துகிறாரே என்று நம்பிய சவுரப், ரியாவின் பேச்சை முழுமையாக நம்பியுள்ளார். அவர் காட்டிய பேராசையினால் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய சம்மதித்த சவுரப், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரையிலான வெறும் 3 மாத காலகட்டத்திலேயே, ரியா கூறிய பல்வேறு வங்கி கணக்குகளில் கொஞ்சம் கொஞ்சமாக மொத்தம் ரூ.1.66 கோடியை முதலீடு செய்து அதிர வைத்துள்ளார்.
ஷாக்கில் உறைந்த இன்ஜினீயர்
பணத்தை வாங்கிய ரியா, அந்த வங்கி கணக்குகளுக்கு வரும் லாபத்தையும், சவுரப் முதலீடு செய்த அசலையும் எப்போது தேவையென்றாலும் அவர் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லி சவுரப்பை நம்ப வைத்துள்ளார். இந்த நிலையில், சவுரப்புக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டுள்ளது.
இதையடுத்து ரியா குறிப்பிட்ட வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க அவர் முயன்றபோதுதான் அவருக்கு இடி போன்ற அந்த உண்மை தெரியவந்தது. அந்த கணக்குகளில் வெறும் ரூ.4,250 மட்டுமே எஞ்சியிருந்தது.
சைபர் கிரைமில் புகார்
பணத்தை காணாமல் பதறிப்போன சவுரப், உடனடியாக காதலி ரியாவை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது..
பல முறை பல வழிகளில் ரியாவை தொடர்பு கொள்ள முயன்றும் சவுரப்பால் அவரை பிடிக்க முடியவில்லை. அப்போதுதான் டேட்டிங் ஆப மூலமாக தன்னிடம் ஆசையாக பழகி, திருமண ஆசை காட்டி ரியா என்ற பெண் ரூ.1.66 கோடியை திட்டமிட்டு சுருட்டிக்கொண்டு மோசடி செய்ததை சவுரப் உணர்ந்தார்.
இதனால் நிலைகுலைந்து போன சவுரப், உடனடியாக பெங்களூரு தென்கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். சவுரப் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவான அந்த மர்ம இளம்பெண்ணை தீவிரமாக வலைவீசி தேடி வருகிறார்கள்.. டேட்டிங் ஆப் மூலம் இன்ஜினீயருக்கு நேர்ந்த இந்த கதி பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...!!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications