18 வருட ஏக்கம்.. ஆர்சிபி கோப்பை வாங்கியதும்.. பெங்களூரில் ரசிகர்கள் செய்த சம்பவம்.. வீடியோ பாருங்க

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்று ஆர்சிபி அணி புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக எட்டாக் கனியாக இருந்த கோப்பை கனவு நேற்று நனவானது. இதனால் விராட் கோலி மைதானத்திலேயே கண் கலங்கினார். அதேபோல் நாடு முழுவதும் ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடினர். குறிப்பாக பெங்களூரில் வண்ண வண்ண பட்டாசுகளை வெடித்து ரசிகர்கள் இரவை பகலாக்கிய சம்பவம் நடந்தது.

எவ்வளவு கேலி, எவ்வளவு கிண்டல்.. 17 ஆண்டுகளாக ஐபிஎல் ஆடியும் ஒரு கோப்பை கூட வெல்லவில்லை. . பெண்களுக்கான ஆர்சிபி அணி கூட கோப்பை வென்றுவிட்டது. உங்களால் ஒரு கோப்பை கூட வெல்ல முடியவில்லையே..இந்த முறை தோற்றால் (18 சீசன் தொடர் தோல்வி) குருசாமி ஆகுவீர் என்று இந்த ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்தே வழக்கம்போல் ஆர்சிபி ரசிகர்களை பிற அணியின் ரசிகர்கள் கிண்டல் செய்தனர்.

ipl 2025 rcb bangalore bengaluru 2025

ஆனால் நாங்கள் கோப்பை அடிக்கிறோமோ இல்லையோ.. தொடர்ந்து ஆர்சிபிக்கு சப்போர்ட் செய்வோம் எனவும், வழக்கம்போல் ‛‛ஈ சாலா கப் நம்தே'' என்று ஆர்சிபி அணி மீது நம்பிக்கை வைத்து சீசனை தொடங்கினர் அந்த ரசிகர்கள். இன்று அவர்களின் கோப்பை கனவு நனவாகிவிட்டது.

நேற்று நடந்த ஐபிஎல் 2025 பைனலில் ஸ்ரேயாஸ் ஐயரின் பஞ்சாப் அணியும், ரஜத் பட்டிதாரின் பெங்களூர் அணியும் மோதியது. முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களை எடுத்து தோல்வியை சந்தித்துள்ளது. 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி பெங்களூர் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

18 ஆண்டுகளில் முதல்முறையாக கோப்பையை வென்றால் விராட் கோலி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். மைதானத்திலேயே அவர் கண் கலங்கினார். அதேபோல் ஆர்சிபி ரசிகர்கள் வெற்றியை கொண்டாட தொடங்கி உள்ளனர். நாடு முழுவதும் உள்ள ஆர்சிபி ரசிகர்கள் நேற்றைய தினம் மிகவும் எமோஷனலாக இருந்தனர். குறிப்பாக பெங்களூர் அணி ஒருமுறையாவது கோப்பையை வெல்லாதா? என்று 17 ஆண்டுகளாக ஏக்கத்துடன் இருந்த ரசிகர்கள் நேற்று மகிழ்ச்சி உற்சாகத்தில் திளைத்தனர்.

பெங்களூர் உள்பட கர்நாடகா மாநிலம் முழுவதும் நேற்றைய வெற்றியை ரசிகர்கள் பட்டாசு, வாணவேடிக்கையுடன் கொண்டாடினர். பெங்களூரில் தீபாவளி முன்கூட்டியே வந்துவிட்டதா? என்ற அளவுக்கு இடைவிடாது ஆர்சிபி ரசிகர்கள் வண்ண வண்ண வாணவேடிக்கையை வெடித்தனர். பெங்களூர் பிஜிஎஸ் மைதானத்தில் ரசிகர்கள் கூடி வெற்றியை கொண்டாடினர். அதேபோல் எம்ஜி ரோடு, பிரிகேட் ரோடு உள்பட நகரின் பல இடங்களில் ஆர்சிபி ரசிகர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து வெற்றியை கொண்டாடினர்.

ரசிகர்கள் பலரும் தங்களின் நண்பர்களுடன் சேர்ந்து டூவீலரில் முக்கிய சாலைகளில் ஊர்வலம் சென்றனர். விராட் கோலியின் போட்டோ, ஆர்சிபி கொடியை கையில் வைத்து ஆர்சிபி ஜெர்சி அணிந்து அவர்கள் கூச்சலிட்டபடி ஊர்வலம் சென்றனர். மேட்ச் நடக்கும்போதே பஞ்சாப் அணியின் ஒவ்வொரு விக்கெட்டுகள் விழும்போதும் ரசிகர்கள் பட்டாசு வெடிக்க தொடங்கினர். இரவு 10.30 மணிக்கு தொடங்கிய இந்த கொண்டாட்டம் விடியவிடிய நடந்தது. அதிகாலையிலும் பலரும் பட்டாசு வெடித்தனர்.

அதேபோல் பெலகாவி, தார்வார் மாவட்டம் உப்பள்ளி, கலபுரகி, கங்காவதி உள்ளிட்ட பல நகரங்களிலும் மக்கள் பட்டாசு வெடித்து ஆர்சிபி வெற்றியை கொண்டாடினர். கலபுரகியில் போலீசார் ஆர்சிபி ரசிகர்கள் மீது லேசாக தடியடி நடத்தி கலைத்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+