Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RCB மீது கிரிமினல் வழக்கு.. கூட்டநெரிசலால் மைக்கேல் டி குன்கா வைத்த ஆப்பு! கர்நாடகா கேபினட் ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஆர்சிபி வெற்றி கொண்டாடத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் தாக்கல் செய்த அறிக்கையில் ஆர்சிபி அணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் ஆர்சிபி மற்றும் கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் மீது கிரிமினல் வழக்கு தொடர முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி நடந்த பைனல் போட்டியில் ஆர்சிபி அணி, பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் ஆனது. இதனை ஆர்சிபி ரசிகர்கள், கர்நாடகா மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

bengaluru-stampede-karnataka-cabinet-approved-filing-of-criminal-cases-against-rcb-and-karnataka-st

இதையடுத்து பைனல் முடிந்த மறுநாள் ஆர்சிபி அணி வீரர்கள் பெங்களூருவுக்கு வெற்றி கோப்பையுடன் வந்தனர். கடந்த 17 ஆண்டுகளாக ஆர்சிபி கோப்பை வெல்லவில்லை. இதனால் இந்த வெற்றியை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு இருந்தது.

பெங்களூர் விதான சவுதா, பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் ஆர்சிபி அணி வீரர்களின் வெற்றி கொண்டாட்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் விதானசவுதா முதல் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானம் வரை ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு பல லட்சம் பேர் குவிந்தனர். அப்போது திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் இறந்தனர். 47 பேர் காயமடைந்தனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆர்சிபி அணி மற்றும் கர்நாடகா கிரிக்கெட் சங்கம் உள்ளிட்டவற்றின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தான் இன்று பெங்களூர் விதானசவுதாவில் கர்நாடகா அமைச்சவை கூட்டம் நடந்தது. முதல்வர் சித்தராமையா தலைமையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் ஆர்சிபி மற்றும் கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது ஆர்சிபி மற்றும் கர்நாடகா கிரிக்கெட் சங்கத்துக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கர்நாடகா அமைச்சரவையின் இந்த முடிவுக்கு முக்கிய காரணம் ஓய்வு பெற்ற கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா தான். கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை தொடர்பாக தனிநபர் ஆணையத்தை கர்நாடகா அரசு அமைத்தது. விசாரிக்க ஜான் மைக்கேல் டி குன்கா நியமிக்கப்பட்டார்.

ஜான் மைக்கேல் குன்கா விசாரணை நடத்தி கடந்த 11ம் தேதி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கை கர்நாடகா உயர்நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கடந்த ஜூன் 4ம் தேதி நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு ஆர்சிபி அணி, கர்நாடகா கிரிக்கெட் சங்கம்,நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் டிஎன்ஏ என்டர்டெயின்மெண்ட் மற்றும் பெங்களூர் போலீசார் தான் தான் நேரடி காரணம். இந்த நிகழ்ச்சியை உடனடியாக நடத்தினால் பிரச்சனை வரும் என்பது, கூட்ட நெரிசலை சமாளிக்க கூடாது என்பது தெரிந்தும் நிகழ்ச்சியை நடத்தி உள்ளது. இது சம்பந்தப்பட்டவர்களின் அலட்சியம் மற்றும் கடமை தவறுதல் உள்ளிட்டவற்றை எடுத்து காட்டுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கான திட்டமிடல், ஒருங்கிணைப்பு, கூட்ட மேலாண்மை உள்ளிட்ட அனைத்தும் பிரச்சனை உள்ளது. வெறும் 79 போலீசார் மட்டுமே மைதானத்தின் உள்ளே பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மைதானத்தின் வெளியே போலீசார் நியமனம் செய்யப்டவில்லை. அதேபோல் ஆம்புலன்ஸ்சும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிக்கை தொடர்பாக கர்நாடகா அமைச்சரவையில் இன்று விவாதிக்கப்பட்டு ஆர்சிபி மற்றும் கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது கிரிமினல் வழக்கு தொடர ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+