மனைவி தொல்லை தாங்கல.. டார்ச்சர் மேல டார்ச்சர்! பெங்களூர் ராஜ்பவனில் தற்கொலைக்கு முயன்ற கணவன்
பெங்களூர்: மனைவி தன்மீது போலியான வழக்கை தொடுத்து கொடுமை படுத்துவதாகவும், தன் தரப்பு நியாயத்தை போலீசார் கேட்க கூட தயாராக இல்லை என்று கூறி, இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் ராஜ்பவன் வாசலில் பெட்ரோலை தன்மீது ஊற்றிக்கொண்ட இளைஞர் தனக்கு தானே தீ வைத்துக்கொள்ள முயன்றார். இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

சம்பவம் குறித்து விளக்கிய போலீசார், அந்த இளைஞரின் பெயர் சுஹெயில் அகமது என்றும், அவர் பெங்களூரில் ஹெப்பால் பகுதியில் வசித்து வருகிறார் என்றும் கூறியுள்ளனர். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. வழக்கம் போல எல்லா புது மாப்பிள்ளை பெண் போல இருவருக்கும் மண வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படி நிம்மதியாகத்தான் இருந்திருக்கிறது. சுஹெயில் என்ஜினியர் என்பதால் வருமானத்திற்கு எந்த பஞ்சமும் இல்லை.
ஆனால் இவர் நேற்று ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் வந்திருக்கிறார். அங்கு வாசலில் உள்ள படியில் நின்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென பெட்ரோலை தன் மீது ஊற்றிக்கொண்டு தன்னை தானே கொளுத்திக்கொள்ள முயன்றார். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் இதனை தடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஏன் தற்கொலைக்கு முயன்றார்? என்பது குறித்து விசாரித்தபோது பல்வேறு விஷயங்கள் தெரிய வந்திருக்கிறது.
அதாவது, இவரது மனைவிக்கும் இவருக்கும் சமீப காலமாக ஒத்து வரவிலலை. இவர் மீது இவரது மனைவி ஏற்கெனவே புகார் கொடுத்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் சுஹெயில் மீது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மனைவி தன் மீது போலி வழக்கை பதிவு செய்துள்ளதாகவும், வழக்கை வைத்து தன்னை கொடுமை படுத்துவதாகவும் சுஹெயில் புலம்பியுள்ளார். தன்மீது எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ள சுஹெயில் வேண்டும் என்றே மனைவி பழிவாங்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
"வழக்கை நான் எதிர்கொள்ள தயார். ஆனால் என் தரப்பு நியாயத்தை போலீசார் கேட்கவில்லை. எனவே எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் அனுபவிக்கும் துன்பங்கள் புற்றி புகார் அளிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் போலீசார் வாங்க மறுக்கிறார்கள். எனவே நான் கடுமையான மன அழுத்தத்திற்கும் உளவியல் பாதிப்புக்கும் ஆளாகியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே கணவர்கள் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சமடையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. போலி புகார் கொடுத்து அதன் மூலம் சொத்தில் பங்கு கேட்டு எடுத்து சென்றுவிடுகிறார்கள் என்றும் ஆண்கள் புலம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications