பெங்களூரில் இப்போ இந்த மோசடிதான் டிரெண்டிங்! உஷார் மக்களே.. சிக்கி ஏமாந்துடாதீங்க
பெங்களூர்: தென்னிந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரில், தற்போது புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. ஏரளாமான ஐடி ஊழியர்கள் இந்த மோசடியில் சிக்கி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதாவது வாடகைக்கு புதியதாக வீடு தேடுபவர்களை குறி வைத்து இந்த மோசடி அரங்கேற்றப்படுகிறது. வாடகைக்கு வீடு வேண்டும் எனில், செக்யூரிட்டி டெபாசிட் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அப்படி செலுத்தப்படும் டெபாசிட் பணம் திரும்ப வழங்கப்படுவதில்லை என்பதே தற்போது பிரச்சனை.

சமீபத்தில் கூட BTM லே அவுட்டில் வசிக்கும் நபர் ஒருவர், தனது ஹவுஸ் ஓனர் செக்யூரிட்டி டெபாசிட் தொகையை சுருடிக்கொண்டு ஓடிவிட்டதாக புலம்பியுள்ளார். பெங்களூரில் செக்யூரிட்டி டெபாசிட் என்றால், நம்மூரில் அட்வான்ஸ் பணம் என்று சொல்லலாம். பெங்களூரை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் தினமும் வருகின்றனர். அதில் சில ஆயிரம் பேர் வேலை, படிப்பு, மருத்துவ சிகிச்சை என பெங்களூரில் தங்குகின்றனர். அவர்களுக்கு வாடகைக்கு வீடு தேவைப்படுகிறது.
வாடகை தொகை ரூ.15,000 எனில் அட்வான்ஸ் தொகை ரூ.50,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை கூட வசூலிக்கப்படுகிறது. இப்படி வாடகைக்கு விடப்படும் வீடுகள் காலியாகும்போது அந்த பணம் திருப்பி தரப்பட வேண்டும். சில ஹவுஸ் ஓனர்கள், பாத்ரூம் குழாய் பைப் உடைந்துவிட்டது, பெயிண்ட் அடிக்கனும் அதற்கான செலவு என ரூ.5,000 வரை இதில் கழித்துக்கொண்டு மீதி பணத்தை கொடுப்பார்கள். இதுதான் உலக வழக்கம். ஆனால், பெங்களூரில் அட்வான்ஸ் பணம் முழுவதும் அப்படியே அபேஸ் செய்யப்படுகிறது. இது தற்போது பெங்களூரில் புதுவித மோசடியாக உருவெடுத்திருக்கிறது.
வீட்டை காலி செய்ய 3 மாதங்களுக்கு முன்னதாக முறைப்படி ஹவுஸ் ஓனர்கள் நோட்டீஸை கொடுக்கிறார்கள். வீடும் அதற்கேற்ப குறிப்பிட்ட நாளில் காலி செய்யப்படுகிறது. ஆனால், கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் பணம் கிடைப்பதில்லை. இது குறித்து பெங்ளூர் வாசி ஒருவர் ரெடிட் தளத்தில் புலம்பி தள்ளியிருக்கிறார். நான் அந்த வீட்டில் வசித்ததற்கான அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்கிறேன். ஆனால் அட்வான்ஸ் பணத்தை மட்டும் என்னால் வாங்க முடியவில்லை. போன் செய்தால் எடுப்பதில்லை, மெசேஜ் செய்தால் ரீப்ளை செய்வதில்லை.
வீட்டின் குடியிருப்பு ஆவணங்கள், வாடகை மற்றும் அட்வான்ஸ் கொடுத்ததற்கான ஆதாரங்கள் அகியவற்றை வைத்திருக்கிறேன். இது தொடர்பாக போலீசிலும் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புலம்பியுள்ளார். இவரது கருத்தை ஆமோதித்துள்ள பலரும், ஆமாம் அட்வான்ஸ் பணத்தை திரும்ப பெற முடியவில்லை என்று புலம்பியுள்ளனர். வேறு சில பயனர்கள், நண்பர்களுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளியுங்கள். அப்போதுதான் உங்கள் பணம் கிடைக்கும். இதேபோலதான் என்னுடைய பணமும் கிடைத்தது என்று கூறியிருக்கிறார்.
எனவே பெங்களூர் போகும் மக்களே! வீடு வாடகைக்கு எடுக்கும்போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.












Click it and Unblock the Notifications