பெங்களூரில் ஷாக்! தொடையில் கை வைத்து.. ரேபிடோ பைக் ஓட்டுநர் செய்த அத்துமீறல்!
பெங்களூர்: ரேபிடோ பைக் ஓட்டுநர்களின் அத்துமீறல்கள் தொடர் கதையாக மாறியிருக்கிறது. அந்த வகையில் தற்போது பெங்களூரில், ரேபிடோ பைக் ஓட்டுநர் ஒருவர், பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண்ணின் தொடை மீது கை வைத்து அத்துமீறி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ சோஷியில் மீடியாவில் பரவலாக ஷேராகி வருகிறது.
சர்ச் ஸ்ட்ரீட்டிலிருந்து, அவர் தங்கியிருந்த பேயிங் கெஸ்ட் உள்ள பகுதிக்கு ரேபிடோ பைக் டேக்சியை இளம்பெண் ஒருவர் புக் செய்திருந்தார். அவரை அழைத்து செல்ல KA 55E A 4344 என்கிற பதிவெண் கொண்ட கருப்பு நிற பல்சர் பைக்கில் இளைஞர் வந்திருக்கிறார். ஓடிபி சொல்லி, பைக்கில் அமர்ந்த இளம்பெண் கொஞ்ச தூரம் சென்ற பின்னர் தன் உடல் மீது அத்துமீறலை எதிர்கொண்டிக்கிறார்.

அதாவது, பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண்ணின் தொடை மீது, பைக் ஓட்டும் இளைஞர் கை வைத்திருக்கிறார். இளம்பெண் இதை சற்றும் எதிர்பார்க்காததாலும், பெங்களூருக்கு புதுசு என்பதாலும், பைக் எங்கு சென்றுக்கொண்டிருக்கிறது என்பது தெரியாததாலும், இந்த சம்பவத்திற்கு உடனடியாக எதிர்வினையாற்றவில்லை. இதை தனக்கு கிடைத்த அனுமதி என்று நினைத்துக்கொண்ட இளைஞர், மீண்டும் அதேபோல அநாகரீகத்தை செய்திருக்கிறார். இந்த முறை சம்பவத்தை இளம்பெண் வீடியோவாக ரெக்கார்ட் செய்திருக்கிறார்.
இறங்க வேண்டிய இடம் வந்த பின்னர் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். இளம்பெண்ணுக்கு ஆதரவாக மற்றொரு இளைஞர் ஒருவரும் ரேபிடோ பைக் ஓட்டிய இளைஞரை எச்சரித்திருக்கிறார்.
இது பற்றி தனது சோஷியல் மீடியா பக்கத்தில் இளம்பெண் பதிவிட்டிருப்பதாவது, "சர்ச் ஸ்ட்ரீட்டிலிருந்து எனது பேயிங் கெஸ்ட் அறைக்கு ராபிடோ பைக் டாக்சியில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஓட்டுநர் எனது தொடையை பிடிக்க முயன்றார். அது திடீரென்று நடந்ததால், என்னால் அதை உடனடியாகப் புரிந்துகொள்ளவோ, பதிவுசெய்யவோ முடியவில்லை. அவர் மீண்டும் அதைச் செய்தபோது, என்ன செய்கிறீர்கள்? இப்படிச் செய்யாதீர்கள் என்று நான் கூறினேன், ஆனால் அவர் நிறுத்தவில்லை.
நான் வந்து சேர வேண்டிய இடத்திற்கு வந்த பின்னர், இந்த சம்பவத்தை கவனித்துக்கொண்டிருந்த மற்றொரு இளைஞரிடம் இது பற்றி கூறினேன். அவர் பைக் டாக்சி ஒட்டி வந்த இளைஞரை விசாரித்து எச்சரித்தார். ஓட்டுநர் மன்னிப்பு கேட்டதோடு, மீண்டும் அப்படிச் செய்ய மாட்டேன் என்று கூறினார். ஆனால், அவர் கிளம்பும்போது, என்னை நோக்கி விரல் நீட்டியது, என்னை மேலும் பாதுகாப்பற்றதாக உணர வைத்தது.
இது போன்ற ஒரு அனுபவம் எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என்பதற்காகவே நான் இதைப் பகிர்கிறேன். டாக்சி காரிலும், டாக்சி பைகிலும் இது போன்று எங்கும் இருக்கக்கூடாது. எனக்கு இப்படி நடப்பது இது முதல் முறை அல்ல. ஆனால், இன்று நான் மிகவும் பாதுகாப்பற்றதாக உணர்ந்ததால் அமைதியாக இருக்க முடியவில்லை" என்று கூறியிருக்கிறார்.
இந்த போஸ்ட்டுக்கு பலருக்கும் கமென்ட் செய்திருக்கிறார்கள். போலீசில் இதுபற்றி புகார் அளிக்க வேண்டும் என்று அவர்களில் சிலர் கூறியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications