பெங்களூரின் 3 தொகுதிகளிலும் வழக்கம்போல் வென்ற பாஜக.. அண்ணாமலையின் நண்பர் தேஜஸ்வி சூர்யா மாஸ் வெற்றி
பெங்களூர்: பெங்களூரில் உள்ள 3 லோக்சபா தொகுதிகளிலும் வழக்கம்போல் பாஜக வேட்பாளர்கள் வென்றனர். குறிப்பாக பெங்களூர் தெற்கு தொகுதியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நெருங்கிய நண்பர் தேஜஸ்வி சூர்யா மீண்டும் வாகை சூடியுள்ளார்.
கர்நாடகாவில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. ஏப்ரல் 25, மே 7 என 2 கட்டங்களாக லோக்சபா தேர்தல்கள் நடந்தன. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தான் பெங்களூர் சிட்டியை எடுத்து கொண்டால் மொத்தம் 3 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த 3 தொகுதிகளும் தற்போது பாஜகவின் வசம் தான் உள்ளது. சொல்லப்போனால் பெங்களூர் பாஜகவின் கோட்டையாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக பெங்களூரில் உள்ள லோக்சபா தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியாத நிலை உள்ளது.
இத்தகைய சூழலில் தான் மீண்டும் பெங்களூரில் உள்ள 3 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் வழக்கம்போல் பெங்களூரில் உள்ள 3 தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளனர். பெங்களூரில் உள்ள 3 லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்கள் யார், அவர்கள் பெற்ற வாக்குகள் குறித்த முழுவிபரம் வருமாறு:
பெங்களூர் வடக்கு: பெங்களூர் வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர்ஷோபா கரந்தலாஜே களமிறங்கினார். இவர் கடந்த முறை பாஜக சார்பில் உடுப்பி - சிக்கமகளூர் தொகுதியில் வென்ற நிலையில் இந்த முறை பெங்களூர் வடக்கில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ராஜீவ் கவுடா களமிறங்கியிருந்தார்.
இந்நிலையில் தான் ஷோபா கரந்தலாஜே மொத்தம் 9 லட்சத்து 41 ஆயிரத்து 543 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய பாஜக வேட்பாளர் ராஜீவ் கவுடா 6 லட்சத்து 81 ஆயிரத்து 634 ஓட்டுகள் பெற்றார். இதன்மூலம் பாஜக வேட்பாளர் ஷோபா கரந்தலாஜேவிடம், காங்கிரஸ் வேட்பாளர் ராஜீவ் கவுடா 2 லட்சத்து 59 ஆயிரத்து 909 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதன்மூலம் ஷோபா கரந்தலாஜே வெற்றி பெற்றுள்ளார்.
பெங்களூர் சென்ட்ரல்: பெங்களூர் சென்ட்ரல் தொகுதியில் சிட்டிங் எம்பியான பிசி மோகன் மீண்டும் பாஜக வேட்பாளராக களமிறங்கினார். அவரை எதிர்த்து பாஜகவில் மன்சூர் அலிகான் போட்டியிட்டார். இன்றைய ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் பிசி மோகன் வெற்றி பெற்றார். பிசி மோகன் 6 லட்சத்து 14 ஆயிரத்து 800 ஓட்டுகள் பெற்ற நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலிகான் 6 லட்சத்து 8 ஆயிரத்து 366 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இதனால் பிசி மோகன் 6,434 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலிகானை வீழ்த்தினார்.
பெங்களூர் வடக்கு: பெங்களூர் வடக்கு தொகுதி பாஜக எம்பியாக இருப்பவர் தேஜஸ்வி சூர்யா. இவர் பாஜகவின் இளைஞர் அணியின் தேசிய தலைவராக உள்ளார். இவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருங்கிய நண்பர். இந்நிலையில் தான் தேஜஸ்வி சூர்யா மீண்டும் அந்த தொகுதியில் களமிறங்கினார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகன் சவுமியா ரெட்டி போட்டியிட்டார்.
இன்றைய ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் தேஜஸ்வி சூர்யா மீண்டும் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 7 லட்சத்து 22 ஆயிரத்து 310 ஓட்டுகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி 4 லட்சத்து 56 ஆயிரத்து 661 ஓட்டுகள் மட்டுமே பெற்று 2லட்சத்து 65 ஆயிரத்து 649 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications