"ஒரு முஸ்லிம் ஓட்டு கூட எங்களுக்கு வேண்டாம்".. எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றிய பாஜகவின் ஈஸ்வரப்பா!
பெங்களூர் : கர்நாடகா தேர்தல் வரும் மே 10ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகள் காங்கிரஸுக்கு சாதகமாக வந்துகொண்டிருக்கும் சூழலில், பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, "எங்களுக்கு ஒரு முஸ்லீம் ஓட்டு கூட வேண்டாம்" எனப் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கர்நாடகா தேர்தல் : கர்நாடகாவை பொறுத்தவரை, பாஜக மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அங்கு வெற்றியை தீர்மானிக்கும் லிங்காயத்து, ஒக்கலிகா ஆகிய சமூகங்களைச் சேர்ந்த மக்கள் பாஜக எதிர்ப்பு மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல, முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வாக்குகளும் பாஜகவுக்கு இந்த முறை கிடைக்காது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், முஸ்லிம்களுக்கான நான்கு சதவீத ஓபிசி இடஒதுக்கீட்டை கர்நாடக அரசு ரத்து செய்து, லிங்காயத் மற்றும் வொக்கலிகாக்களுக்கு இட ஒதுக்கீட்டை பகிர்ந்து அளித்தது. ஓபிசி முஸ்லீம்களை 10 சதவீத EWS பிரிவுக்கு மாற்றவும் முடிவு செய்தது. இதனால் அதிருப்தி அடைந்த முஸ்லீம் வாக்காளர்களை கவரும் வகையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஓபிசி பட்டியலில் முஸ்லிம் சமூகத்திற்கு இடஒதுக்கீடு மீண்டும் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.
பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு : இதனால், முஸ்லீம்கள் மத்தியில் காங்கிரஸ் ஆதரவு மனவோட்டம் ஏற்பட்டுள்ளதால், அனைத்து தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் பாஜக பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஷிவமொக்கா தொகுதி பாஜக எம்எல்ஏவும் பாஜக மூத்த தலைவருமான ஈஸ்வரப்பாவின் பேச்சு பாஜகவுக்கு சிக்கலாக அமைந்துள்ளது. முஸ்லிம் சமூகத்தின் ஒரு ஓட்டு கூட பாஜகவுக்கு தேவையில்லை என ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஷிவமொக்காவில் பாஜக நிர்வாகிகள் மத்தியில் பேசிய ஈஸ்வரப்பா, "ஷிவமொக்காவில் 50 ஆயிரம் முதல் 55 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருப்பதாக கூறுகிறார்கள். அதனால் முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேச வேண்டும் என பாஜகவினர் யோசனை கூறுகின்றனர். நான் அவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன். எங்களுக்கு ஒரு முஸ்லீம் ஓட்டு கூட தேவை இல்லை. தேசப்பற்று மிக்க முஸ்லிம்களும் கர்நாடகாவில் இருக்கிறார்கள். அவர்கள் பாஜகவுக்கு ஓட்டு போடுவார்கள்.
முஸ்லீம் ஓட்டு தேவையில்லை : இஸ்லாமியர்களின் உடல்நலம் மற்றும் கல்வி சார்ந்த பிரச்சனைகளுக்கு நாம் ஏராளமான உதவிகளை செய்திருக்கிறோம். அந்த முஸ்லீம்கள் பாஜகவுக்கு ஓட்டு போடுவார்கள். இந்து மக்கள் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். கர்நாடகாவில் பாஜகவை தவிர வேறு எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் இந்துக்களுக்கு பாதுகாப்பு இருக்காது. நாங்கள் ஒருபோதும் இந்துக்களை தாழ்ந்துபோய் இருக்க விட மாட்டோம்.
தேசவிரோத சக்திகள் காங்கிரஸ் கட்சியுடனே இருந்து கொள்ளட்டும். அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இந்தத் தேர்தலில் சாலை, குடிநீர், வடிகால் போன்ற வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மக்களிடம் பாஜகவினர் பேச வேண்டாம். இந்து - முஸ்லிம் பிரச்சனை பற்றி மட்டும் பேசினால் போதும். இந்து தர்மம் குறித்தும் மக்களிடம் பேச வேண்டும்." என ஈஸ்வரப்பா பேசியுள்ளார்.
பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் லட்சுமன் சவதி உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தனர். அதிருப்தி அடைந்த ஈஸ்வரப்பா, தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் தான் பாஜக கூட்டத்தில் இவ்வாறு பேசியுள்ளார் ஈஸ்வரப்பா.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்!












Click it and Unblock the Notifications