பாஜகவில் இருந்து விலகும் ஜெகதீஷ் ஷெட்டர்.. உடனே வலை விரிக்கும் காங்.! கர்நாடகாவில் பெரிய ட்விஸ்ட்
பெங்களூர்: கர்நாடக மாநில பாஜக மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாஜகவில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கிறது. அங்கே மே மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க பல்வேறு மாற்றங்கள் அரசியல் அரங்கில் நடந்து வருகிறது.
கர்நாடகாவில் இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு ஆட்சியில் இருக்கிறது. அங்கே மாநில அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதால், பல சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.

பாஜக சார்பில் இரண்டு வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இரண்டிலும் கர்நாடக மாநில பாஜக மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டர் பெயர் இடம் பெறவில்லை. இதற்கு ஜெகதீஷ் ஷெட்டர் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தார்.
விலகிய ஜெகதீஷ் ஷெட்டர்: இதனிடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாஜகவில் இருந்து விலகவுள்ளதாகவும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் ஜெகதீஷ் ஷெட்டர் அறிவித்துள்ளார். மேலும், தனக்கு எதிராகச் சதி நடக்கிறது என்றும் முறைப்படி ராஜினாமா செய்த பின் அனைத்தையும் கூறுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சனிக்கிழமை சந்தித்தபோதும், ஹூப்ளி-தர்வாட் மத்திய தொகுதியில் தமக்கு டிக்கெட் மறுப்பதால் குறைந்தது 20 முதல் 25 இடங்களை இழக்க நேரிடம் என்று மிரட்டும் வகையில் கூறியிருந்தார். வேட்பாளர் பட்டியல் தொடர்பாகக் கட்சி உரிய முடிவை எடுக்கும் என அவர் கூறியிருந்த நிலையில், இப்போது திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் முயற்சி: முன்னாள் முதல்வரான ஜெகதீஷ் ஷெட்டர் எடியூரப்பாவுக்கு அடுத்தபடியாக முக்கிய லிங்காயத் தலைவர் ஆவர். இப்போது அவரை தங்கள் கட்சியில் சேர்க்கக் காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. அவர் இதில் இணைந்தால் வட கர்நாடகத்தில் காங்கிரசுக்கு பலத்தை அதிகரிக்கும்.
ஜெகதீஷ் ஷெட்டர் இப்போது ஹூப்ளி-தர்வாட் சென்ட்ரலில் இருந்து சிட்டிங் எம்.எல்.ஏ ஆக உள்ளார். பாஜக தலைமை இந்த முறை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என இவரைக் கேட்டுக் கொண்டதாகவும் இதனால் அவர் கடும் அதிருப்டி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ஜெகதீஷ் ஷெட்டருக்கு போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என்பதை வலியுறுத்தி 16 ஹுப்பள்ளி-தர்வாட் மாநகராட்சி கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதத்தை அளித்திருந்தனர்.
பாஜக இதுவரை ஹூப்ளி-தர்வாட் சென்ட்ரல் உள்ளிட்ட 12 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எச்சரிக்கை: முன்னதாக நேற்று சனிக்கிழமை இது குறித்து அவர் கூறுகையில், "இன்னும் நேரம் இருக்கிறது. எனக்கு ஒரு வேலை போட்டியிட வாய்ப்பு தரவில்லை என்றால்... எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பேன். அப்படியொரு நிலைமை வராது என நம்புகிறேன்.. எனக்கு சீட் தரவில்லை என்றால் கட்சிக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூட, ஷெட்டருக்கு சீட்டு கிடைக்காவிட்டால், அது ஒரே இடத்தில் மட்டும் அல்ல, பல இடங்களில் கட்சியின் செல்வாக்கைப் பாதிக்கும் என்று கூறியுள்ளார். எனக்கு சீட் தரவில்லை என்றால் மாநிலம் முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.. குறிப்பாக வட கர்நாடகாவில் உடனடியாக 20 முதல் 25 தொகுதிகளில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.
பசவராஜ் பொம்மை: முன்னதாக இது குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, "ஷெட்டர் வடக்கு கர்நாடகாவின் மூத்த தலைவர், அவரைத் தக்கவைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்" என்று கூறியிருந்தார்.
இந்தச் சூழலில் தான் அவர் பாஜகவில் இருந்து விலகவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இப்போது அவரை தங்கள் கட்சியில் சேர்க்கக் காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. அவர் இதில் இணைந்தால் வட கர்நாடகத்தில் காங்கிரசுக்கு பலத்தை அதிகரிக்கவே செய்யும்
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications