கர்நாடக காங்கிரஸ் அபாரம்.. தபால் வாக்கில் முன்னிலை வகித்த பாஜக.. இவிஎம்மில் பின்னடைவு.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை வகித்த நிலையில், தற்போது இவிஎம் வாக்குகளில் காங்கிரஸ் அபார முன்னிலை வகித்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. அங்கே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போது தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு உள்ளன..

தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை பெற்ற நிலையில் இவிஎம் வாக்கில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. தபால் வாக்குகள் முடிவடைந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பாஜக 90 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 107 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஜேடி ஸ் மொத்தம் 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

BJP leading ahead of Congress in Postal votes in Karnataka Assembly Elections results

அங்கே லிங்காயத்து ஆதரவு, ஹிஜாப் விவகாரம், 40 சதவிகிதம் கமிஷன் உள்ளிட்ட காரணங்கள் பாஜக பின்னடைவை சந்தித்து இருப்பதாக கருதப்படுகிறது.

கர்நாடக அரசியல் 2024 லோக்சபா தேர்தல், தென்னிந்திய அரசியலை நிர்மாணிக்கும் என்பதால் இந்த தேர்தல் முடிவுகள் அதிக கவனம் பெற்றுள்ளது.

தேர்தல் பின்னணி : கடந்த 2018ம் ஆண்டு கர்நாடகாவில் தொங்கு சட்டசபை உருவான நிலையில் எடியூரப்பா 6 நாட்கள் ஆட்சி அமைத்தார். அதன்பின் ஜேடிஎஸ் - காங்கிரஸ் சார்பாக குமாரசாமி ஆட்சி அமைத்தார்.

ஒன்றரை வருட ஆட்சி ஆபரேஷன் கமலா காரணமாக கவிழ்ந்த காரணத்தால், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தது. எடியூரப்பா மீண்டும் ஆட்சி அமைத்த நிலையில், அதன்பின் பொம்மை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

அதாவது 5 வருடத்தில் 3 முதல்வர்கள் அங்கே ஆட்சி வகித்தனர். 4 முறை பதவி ஏற்பு விழாக்கள் மட்டும் நடந்தன. கடந்த வருடம் போல இந்த வருடம் தொங்கு சட்டசபை உருவாகுமா அல்லது தனி ஒரு கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அங்கே ஹிஜாப் விவகாரம், பெங்களூரில் திட்டங்களுக்கு கமிஷன் பெற்ற விவகாரம், மத மோதல், ஜாதி ரீதியிலான மோதல் உள்ளிட்ட பல விஷயங்கள் தேர்தல் நேரத்தில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.

கர்நாடகாவில் பொதுவாக பாஜக, காங்கிரஸ் இரண்டும் பிரதான கட்சிகள். மதசார்பற்ற ஜனதா தளம் இதில் 3வது பெரிய கட்சி. 40 க்கும் குறைவான இடங்களை எடுக்க கூடிய கட்சி என்றாலும் தொங்கு சட்டசபை உருவாகும் போது மதசார்பற்ற ஜனதா தளம்தான் ஆட்சியை தீர்மானிப்பார்கள். இந்த நிலையில்தான் கர்நாடகாவில் இந்த முறை கூட்டணி இன்றி மூன்று கட்சிகளும் தனி தனியாக போட்டியிடுகின்றன . தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிகள் அங்கே அமைய வாய்ப்புகளும் உள்ளன.

கர்நாடகாவில் கடந்த 19 வருடங்களில் 3 முறை தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது. இதில் 2004 தொங்கு சட்டசபை, 2008 தொங்கு சட்டசபை, 2018 தொங்கு சட்டசபைகள் முக்கியமானது ஆகும். அதிலும் கடந்த தேர்தலுக்கு பின் அங்கே 3 முறை முதல்வர்கள் மாறியது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை தொங்கு சட்டசபைக்கு பதிலாக ஏதாவது ஒரு கட்சி முழு மெஜாரிட்டி இந்த முறை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+