காங்கிரசுக்கு பெரிய ஷாக்! கர்நாடகாவில் அதிக இடங்களில் வெல்லும் பாஜக! இது லோக்சபா தேர்தல் சர்வே
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் குறைந்த இடங்களை மட்டுமே கைப்பற்றும் என இந்தியா டிவி, சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மே மாதம் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாஜக 66 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் 19 தொகுதிகளுக்கும் மற்றவர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து கர்நாடகாவில் பாஜக ஆட்சியை பறிகொடுத்தது. மாறாக காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. அதேவேளையில் சட்டசபை தேர்தலில் தோற்றாலும் கூட நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் சார்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி இந்த கருத்து கணிப்பு என்பது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சியை விட பாஜக தான் அதிக இடங்களில் வெற்றி பெறும் என இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதாவது கர்நாடகாவில் மொத்தம் 28 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.
இதில் 20 தொகுதிகள் வரை பாஜக கைப்பற்றும் என இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் (மதசார்பற்ற ஜனதாதளம்)கட்சி ஒரு தொகுதியிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தலில் பாஜக 47 சதவீத ஓட்டுக்களை பெறும் எனவும் காங்கிரஸ் 40 சதவீத ஓட்டுகளையும், ஜேடிஎஸ் கட்சி 9 சதவீத ஓட்டுகளையும் பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 26 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் தலா ஒரு தொகுதிகளை வென்றன. இதனை ஒப்பிட்டு பார்த்தால் பாஜக 6 தொகுதிகளை இழக்கும், அதேவேளையில் காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் அதிகரிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இருப்பினும் கூட கர்நாடகாவில் பாஜகவை விட அதிக இடங்களில் வெல்லும் முனைப்பில் செயல்படும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த கருத்து கணிப்பு ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.
அதாவது தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டம், அன்னபாக்யா திட்டத்தில் 10 கிலோ இலவச அரிசிக்கான ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. மேலும் 200 யூனிட் மின்சார இலவச திட்டமும் உள்ளது.
அதோடு மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கும் திட்டத்துக்கான பதிவை தொடங்கி உள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. மேலும் டிகிரி முடித்து வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம், டிப்ளமோ முடித்து வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
இத்தகைய சூழலில் இந்த கருத்து கணிப்பு என்பது காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இருப்பினும் இந்த திட்டங்கள் முழுமையாக வந்த பிறகு காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் கைகொடுப்பார்கள் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications