பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹோட்டல் ரூமில்.. பெண்ணுடன்.. வீடியோ விவகாரத்தில் திடீர் திருப்பம்.. அமைச்சருக்கு எதிரான புகார் வாபஸ்

பாஜக அமைச்சர் மீது தரப்பட்ட பாலியல் புகார் வாபஸ் பெறப்பட்டது

Google Oneindia Tamil News

பெங்களூரு: ஹோட்டல் ரூமில் இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளிக்கு எதிரான புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளது.. இதையடுத்து கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஒரு சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.. கர்நாடக அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சர்களில் ஒருவர் ரமேஷ் ஜர்கிஹோலி...!

நீர்வளத்துறை அமைச்சராக இருக்கிறார்.. இவர் வீடியோ ஒன்று திடீரென பரபரப்பை கிளப்பியது.. ஒரு அடையாளம் தெரியாத பெண்ணோடு தனிமையில் உறவு கொண்டிருப்பது போல அந்த வீடியோ வெளியாகியிருந்தது.

வீடியோ

வீடியோ

அந்த வீடியோவில் ஹோட்டலில் பெட்ரூமில் ஒரு இளம்பெண்ணுடன் ரமேஷ் ஜார்கிகோலி அரைகுறை டிரஸ்ஸில் ஆபாசமான முறையில் இருப்பது போன்று காட்சிகள் இருந்தன.. அதே படுக்கையில், பெண்ணுடன் படுக்கையில் உருண்டும் புரண்டும் இருந்தார்..!

 பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர், ஷார்ட் பிலிம் ஒன்றை தயாரிக்க அமைச்சரை அணுகியபோது, கர்நாடக பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை தருவதாக உறுதி அளித்திருக்கிறார்.. அப்போதுதான், அமைச்சர் ஹோட்டல் ரூமில் அப்பெண்ணை பாலியல் ரீதியாக ஏமாற்றியதாகவும், அந்தப் பெண்ணிடம் சிடிக்கள், வீடியோக்கள் இருப்பதை அவர் அறிந்ததும், அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்துகிறார் என்றும் புகார் வெளியானது.

 அமைச்சர்

அமைச்சர்

இதுகுறித்து சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திக்கவும், அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோலி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி காங்கிரசார் போராட்டத்தில் குதித்தனர்.. இந்த விவகாரத்தில் சித்திராமையா அளவுக்கு அதிகமாக கொந்தளித்தார்.. அதற்கு காரணம், சித்தராமையா ஜார்கிகோலியை ரொம்பவே ஒருகாலத்தில் நம்பியிருந்ததுதான்.. பெரிதும் நம்பப்பட்ட விசுவாசி, இப்படி செய்துவிட்டாரே என்று வெட்கமாக இல்லையா? என்றும் ஆவேசமாகவும் விமர்சித்தார்.

ராஜினாமா

ராஜினாமா

இறுதியில் அமைச்சர் பதவியையும் தானாக முன்வந்து ராஜினாமா செய்தார்.. இதனிடையே, சம்பந்தப்பட்ட அந்த இளம்பெண்ணை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.. ஆனால், அவர் துபாய்க்கே சென்று விட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த வழக்கில் இப்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.. ரமேஷ் ஜார்கிகோளியிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் ஹனிடிராப் முறையில், இந்த ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்க வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ரமேஷ் ஜார்கிகோளியை அரசியலில் பழிவாங்கும் நோக்கத்துடன் ஆபாச வீடியோ வெளியிடப்பட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது..

விளக்கம்

விளக்கம்

இதையடுத்து, அமைச்சர் மீது தான் அளித்துள்ள புகாரை திரும்ப பெறுவதாக சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி தெரிவித்துள்ளார்.. தன் வழக்கறிஞரிடம், தான் எதற்காக புகார் அளித்தேன், இப்போது எதற்காக அந்த புகாரை திரும்ப பெறுகிறேன் என்பது குறித்தும் தினேஷ் விளக்கமும் தந்துள்ளார். தான் கொடுத்த புகாரில் தொழில் நுட்ப பிரச்சினைகள் இருப்பதால், இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், போலீசார் அதுபற்றி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வீடியோ

வீடியோ

இப்படி ஒரு வீடியோ வெளியானதால்தான், அமைச்சர் பதவியை ரமேஷ் ஜார்கிகோளி ராஜினாமா செய்திருந்தார். ஆனால், அவர் மீது கொடுத்த புகார் திரும்ப பெறப்பட்டு இருப்பது ஆபாச வீடியோ விவகாரத்தில் புதிய திருப்பத்தையும், கர்நாடக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

English summary
BJP minister Ramesh cheating young woman case in Karnakata
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X