பெண் அமைச்சர் பற்றி சர்ச்சை கருத்து! அண்ணாமலை குரு சிடி ரவி கைது! கர்நாடகா சட்டசபை வளாகத்தில் பரபர
பெங்களூர்: கர்நாடக பெண் அமைச்சரை அவதூறாகப் பேசியதாக பாஜக நிர்வாகி சி.டி. ரவியை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். அம்மாநிலச் சட்டசபை வளாகத்திலேயே வைத்து சி.டி.ரவியை போலீசார் கைது செய்தனர்.
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அம்பேத்கரை அமித் ஷா இழிவுபடுத்தியதாகச் சொல்லி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

டெல்லியில் இது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். மறுபுறம் காங்கிரஸ் தான் அம்பேத்கரை இழிவுபடுத்தியதாக பாஜகவினரும் பதிலுக்குப் போராட்டம் நடத்தினர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பாஜக எம்பிக்கள் சிலர் காயமும் அடைந்தனர்.
அதேபோல கர்நாடகாவிலும் சட்டசபையில் இது தொடர்பாகப் போராட்டம் நடந்தது. அப்போது கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை பாஜக எம்எல்சி சி.டி.ரவி மோசமான வார்த்தைகளால் திட்டியதாக காங்கிஸார் கூறுகிறார்கள்.
இது தொடர்பாக அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். அவர் மீது பிஎன்எஸ் 75 மற்றும் 79 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்.
சட்டசபை வளாகத்தில் இருந்த சி.டி. ரவியை அங்கேயே வைத்து போலீசார் கைது செய்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் பணியாற்றியபோது, சிடி ரவி அவருக்கு பழக்கமாகும். அண்ணாமலை பாஜகவில் சேர்ந்ததன் பின்னணியில் இவரும் இருந்தார். தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராகவும் ரவி நியமிக்கப்பட்டார். அண்ணாமலை தலைவராகவும், சிடி ரவி மேலிட பொறுப்பாளராகவும் செயல்பட்டனர். எனவே ரவியை அண்ணாமலையின் அரசியல் குரு-க்களில் ஒருவராகவே பார்க்கிறது பாஜக.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட்












Click it and Unblock the Notifications