பெரிய சிக்கல்.. காங்கிரஸுக்கு கவுன்ட்டர் அட்டாக்.. லிங்காயத் முதல்வர் அஸ்திரத்தை கையில் எடுத்த பாஜக!
பெங்களூர் : பாஜகவைச் சேர்ந்த முக்கிய லிங்காயத் சமூக தலைவர்களை தங்கள் பக்கம் இழுத்துள்ள காங்கிரஸ் கட்சி, பாஜகவை லிங்காயத்துகளுக்கு எதிரான கட்சி என விமர்சித்து வரும் நிலையில், "லிங்காயத் முதல்வர்" எனும் வியூகத்தை கையில் எடுத்துள்ளது பாஜக.
கர்நாடகா மாநிலத்தில் அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்கது லிங்காயத் சமூகம். கர்நாடகாவின் வடக்கு பகுதிகளில் பெரும்பான்மையாக வசிக்கும் லிங்காயத்துகள் மாநிலத்தின் மொத்த மக்கட்தொகையில் 17 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் சுமார் 100 தொகுதிகளில் பெரும்பான்மை சமூகத்தவர்களாக லிங்காயத்து சமூகத்தினராக இருக்கின்றனர். முக்கியமான பாஜக தலைவர்கள் பலர் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பாஜகவுக்கு இச்சமூகம் வலுவான வாக்கு வங்கியாக இருந்து வருகிறது.

இதைத்தான் காங்கிரஸ் கட்சி தற்போது உடைத்துள்ளது. லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர்களான முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மண் சவடி ஆகியோர் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால் பாஜகவில் இருந்து விலகி அண்மையில் காங்கிரஸில் இணைந்தனர்.
வெற்றியை தீர்மானிக்கும் சக்தி : கர்நாடகாவில் வெற்றியை தீர்மானிக்கும் பெரும்பான்மை சமூகமான லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய பாஜக தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது பாஜகவுக்கு கைகொடுத்து வரும் லிங்காயத்து வாக்குகளை பிரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே லிங்காயத் சமூகத்தவரை பகைத்துக்கொண்டால் நிலைமை மோசமாகும் என்பது காங்கிரஸ், பாஜக கட்சிகள் உணர்ந்த ஒன்றுதான்.
வீரேந்திர பாட்டிலை முதலமைச்சர் பதவியில் இருந்து காங்கிரஸ் நீக்கிய அடுத்த தேர்தலில் கடும் சரிவைச் சந்தித்தது காங்கிரஸ். இதையடுத்து, தற்போது பாஜக லிங்காயத்துகளுக்கு அநீதி இழைப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டை கையில் எடுத்துள்ளது. எடியூரப்பாவை பாஜக தலைமை ஓரங்கட்டிவிட்டதாகவும், மற்ற தலைவர்களையும் விரட்டி விட்டதாகவும் காங்கிரஸ் பிரச்சாரம் செய்கிறது.
இரு பெரும் தலைவர்கள் : ஜெகதீஷ் ஷெட்டரும், லக்ஷ்மண் சவதியும் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு லிங்காயத் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக மாறும் என்றும், பாஜகவில் உள்ள ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் சவதியின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சியில் சேருமாறும் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.
இந்த பிரச்சாரத்தை உடைத்து, லிங்காயத் சமூக ஆதரவை தங்கம் பக்கம் தக்கவைக்க வேண்டிய டேமேஜ் கண்ட்ரோல் ஸ்டேஜில் இருக்கிறது பாஜக. லிங்காயத் சமூக தலைவர்களை பாஜக மோசமாக நடத்துகிறது என்ற பரப்புரைகளுக்கு பதிலடி கொடுக்க பாஜக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரும் லிங்காயத் சமூகத்தின் முகமாக அறியப்படுபவருமான முன்னாள் முதல்வர் எடியூரப்பா களமிறக்கப்பட்டுள்ளார்.
பாஜக நம்பிக்கை : ஜெகதீஷ் ஷெட்டரையும், லக்ஷ்மண் சவடியையும் நம்பிக்கை துரோகிகள் என்று விமர்சித்துள்ள எடியூரப்பா, அவர்கள் போட்டியிடும் தொகுதியில் நானே நேரடியாக பிரச்சாரம் மேற்கொண்டு அவர்களை தோற்கடிப்பேன் என்று சொன்னதுடன் அவர்களுக்கு பாஜக வழங்கிய அனைத்து பதவிகளையும் பட்டியலிட்டார்.
ஓருசில லிங்காயத் தலைவர்கள் தேர்தலுக்கு முன் மற்ற கட்சிகளுக்கு தாவுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், கடந்த தேர்தலை விட, அதிக இடங்களை பாஜக வெல்லும் என்றும் கர்நாடகா முதலமைச்சரும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவருமான பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பாஜக வியூகம் : பாஜகவைச் சேர்ந்த லிங்காயத் தலைவர்கள் அண்மையில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் இல்லத்தில் சந்தித்தனர். அப்போது, லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாஜகவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது பற்றிய பிரச்சாரத்தை முன்னிறுத்தி, காங்கிரஸ் பிரச்சாரத்தை எதிர்ப்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸால் பரப்பப்படும் "தவறான தகவல்களை" கடுமையாக எதிர்க்க இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
கவுன்ட்டர் அட்டாக் : பாஜகவை "லிங்காயத்துகளுக்கு எதிரானவர்கள்" என்று காங்கிரஸ் கூறுவது பற்றி ஒரு நிருபர் கேட்டபோது, முதல்வர் பசவராஜ் பொம்மை, 1967 முதல் கடந்த 50 ஆண்டுகளில், வீரேந்திர பாட்டீலின் ஒன்பது மாத கால ஆட்சியைத் தவிர, லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையாவது காங்கிரஸ் கட்சி முதல்வராக்கி இருக்கிறதா என்றார்.
மேலும், மூத்த லிங்காயத் தலைவர்களை காங்கிரஸ் எப்படி நடத்தியது என்பதற்குப் பல நிகழ்வுகள் உள்ளன என்றும், வீரேந்திர பாட்டீலை காங்கிரஸ் தலைமை மோசமாக நடத்தியதாகவும், அவர் உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் இருந்தபோது, காங்கிரஸ் தலைமை அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியது என்றும் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications