கர்நாடக சட்ட மேலவை துணைத்தலைவராக பாஜகவின் எம்.கே.பிரனேஷ் நியமனம்!
பெங்களூரு: கர்நாடக சட்ட மேலவையில் துணைத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த எம்.கே.பிரனேஷ் இன்று தேர்வு செய்யப்பட்டார்.
மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவுடன் எம்.கே.பிரனேஷ் தலைவராகியுள்ள நிலையில் அங்கு பாஜக-மஜத கைகோர்த்துள்ளது.
காங்கிரசும், மஜதவும் பாம்பும் கீரியையும் போல் தொடர்ந்து சண்டை போட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சட்ட மேலவை
கர்நாடக மாநில சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பாஜகவைச் சேர்ந்த எம்.கே.பிரனேஷ் இன்று கர்நாடக சட்ட மேலவையில் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், மொத்தம் 75 உறுப்பினர்கள் கொண்ட மேலவையில் காங்கிரஸ்-29, பாஜ-31, மதசார்பற்ற ஜனதா தளம் -14, சுயேட்சை-1 என 71 உறுப்பினர்கள் இருந்தனர்.

காங்கிரஸ்-மஜத உறவு முறிந்தது
கடந்த மூன்றாண்டுகளாக மேலவையில் காங்கிரஸ்-மஜத கூட்டணி இருந்தது. மேலவை தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதாப்சந்திரஷெட்டியும், துணைதலைவராக மஜதவை சேர்ந்த தர்மேகவுடாவும் இருந்தனர். இந்நிலையில் பிரதாப்சந்திரஷெட்டிக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் பாஜ கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திடீரென மஜத ஆதரவு கொடுத்ததின் மூலம் காங்கிரஸ்-மஜத கூட்டணி முறிந்துவிட்டது.

பாஜக-மஜத கூட்டணி கைகோர்ப்பு
இதற்கிடையே துணைதலைவராக இருந்த மஜதவை சேர்ந்த தர்மேகவுடா கடந்த மாதம் மர்மமான முறையில் இருந்தார். இந்த நிலையில் நடந்த தேர்தலில்தான் எம்.கே.பிரனேஷ் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தேர்ந்தெடுக்கப்பட மஜத முக்கிய பங்கு வகித்துள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் பாஜக-மஜத மீண்டும் கைகோர்த்துள்ளது தெளிவாகி உள்ளது.

காரணம் காங்கிரஸ்தான்
கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சி நடந்தது. அதன்பிறகு இந்த கூட்டணி கவிழ்ந்து பாஜக ஆட்சியை பிடித்தது. அதன்பின்பு காங்கிரசும், மஜதவும் பாம்பும் கீரியையும் போல் தொடர்ந்து சண்டை போட்டு வருகின்றன. ஆட்சி கவிழ நீதான் காரணம், நான்தான் காரணம் என்று ஒருவரை குற்றம்சாட்டி வருகின்றனர். குமராசாமியும், சித்தராமையாவும் நேரடியாகவே குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் பாஜக-மஜத மீண்டும் ராசியாகி உள்ளது பலரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது.
-
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
யாருக்கு பிறந்த குழந்தை.. சந்தேக கணவனால் பறிபோன போலீஸ் ஹோம் கார்டு உயிர் -
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 360-டிகிரி மிரட்டல் அனுபவம்! ரசிகர்களை திக்குமுக்காட வைத்த சர்ப்ரைஸ் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications