எங்க “உயிரையே” காப்பாத்தல.. கட்சியே வேணாம்! ராஜினாமா செய்த பாஜகவினர் - அதிர்ச்சியில் கர்நாடக அரசு
பெங்களூரு: பாஜக இளைஞரணி நிர்வாகி கர்நாடகாவில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் பாஜகவை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக கூறி கையெழுத்து போட்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலம் தக்ஷின கன்னடாவில் உள்ள மங்களூருவில் மாவட்ட பாஜக இளைஞரணி உறுப்பினர் பிரவீன் நெட்டாரு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
பிரவீன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது.

கல்வீச்சு
இதனை தொடர்ந்து இன்று சுல்லியா, கடபா மற்றும் புத்தூர் தாலுக்காக்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டன. கடையடைப்புடன் பல இடங்களில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை கையில் எடுத்தனர். அப்போது முழு அடைப்பை மீறி இயக்கப்பட்ட பேருந்துகள் மீது அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இறுதி ஊர்வலம்
புத்தூரிலிருந்து மங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து போல்வார் என்ற பகுதியில் இந்துத்துவா அமைப்பினர் நடத்திய கல்வீச்சு தாக்குதல் காரணமாக சேதமடைந்தது. அதே நேரம் கொல்லப்பட்ட பிரவீன் நெட்டாரு உடல் இறுதிச் சடங்கிற்காக அவரது சொந்த ஊரான நெட்டாருவுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் பாஜக இளைஞரணி நிர்வாகிகள், விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் மீதே தாக்குதல்
பிரவீன் நெட்டாருவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பாஜக தலைவர் நலின் கடீல் மற்றும் மாநில அமைச்சரும் பாஜக மாவட்ட பொறுப்பாளருமான சுனில் குமார் வந்துகொண்டிருந்தனர். அப்போது புத்தூர் என்ற பகுதியில் அவர்கள் வந்த காரை சுற்றி வளைத்த பாஜக இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் இந்துத்துவா அமைபினர் தாக்குதல் நடத்தி காரை கவிழ்க்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸ் தடியடி
பாஜக தலைவர், அமைச்சர் தாக்கப்பட்டதுடன் தக்ஷின கன்னடா மாவட்டம் முழுவதும் போராட்டம் வன்முறையாக மாறி வருவதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல போலீசார் வற்புறுத்தினர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டதால் தடியடி நடத்தி போலீசார் அங்கிருந்து விரட்டினர். இதனால் தொடர்ந்து தக்ஷின கன்னடா மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
|
அரசுக்கு எதிராக முழக்கம்
மோதல் காரணமாக தக்ஷின கன்னடா மாவட்டம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடையடைப்பு போராட்டம் மற்றும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவே முழக்கங்களை எழுப்பினர். இதற்கிடையே சிக்மகளூர் பகுதியில் பாஜகவை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் தொண்டர்கள் உயிர்களை காக்க கட்சி தவறிவிட்டதாக குற்றம்சாட்டி ராஜினாமா செய்துள்ளார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட்












Click it and Unblock the Notifications