பெங்களூர் பரபரப்பு.. ரகசியமாக ராணியுடன் வந்து சென்ற இங்கிலாந்து மன்னர்.. ஆயுர்வேத சிகிச்சை!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ராணி கமீலாவுடன் ரகசியமாக வந்து சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூர் அருகே ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் 3 நாட்கள் தங்கி இருவரும் சிகிச்சை பெற்று இங்கிலாந்து திரும்பியதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இங்கிலாந்து மன்னர் சார்லஸ், அவரது மனைவி ராணி கமீலா இருவரும் கடந்த 27-ந் தேதி லண்டனில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கர்நாடகா மாநிலம் பெங்களூர் வருகை தந்தனர். இந்த பயணம் ரகசியமானது என்பதால் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்ட போது எந்தவித அதிகாரப்பூர்வமான வரவேற்பும் தரப்படவில்லை.

பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து போக்குவரத்து தடைகளை ஏற்படுத்தாமல் பொதுமக்களைப் போல சாலை மார்க்கமாக ஒயிட்பீல்டு அருகே உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு சென்று 3 நாட்கள் தங்கி ஓய்வெடுத்தனர்.
இந்த ஆயுர்வேத மையத்தில் மன்னர் சார்லஸ், ராணி கமீலா இருவருக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆயுர்வேத சிகிச்சை காலத்துக்கான உணவுகளே இருவருக்கும் வழங்கப்பட்டன. நடைபயிற்சி, யோகா பயிற்சிகளையும் இருவரும் மேற்கொண்டனர். இதனையடுத்து நேற்று இருவரும் சிறப்பு விமானம் மூலம் லண்டன் திரும்பிச் சென்றனர். இங்கிலாந்து மன்னர், ராணியுடன் வந்து சென்ற தகவல்கள் தற்போதுதான் வெளியாகி இருக்கின்றன.












Click it and Unblock the Notifications