பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவிற்கு 1 வாரம் கெடு.. போனமுறை மாதிரி சொதப்புனா கதை கந்தல்!
Recommended Video
பெங்களூர்: இன்னும் ஒரு வார காலத்திற்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்று எடியூரப்பாவுக்கு கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா கெடு விதித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில், தோற்ற, கர்நாடக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கூட்டணி அரசு கடந்த செவ்வாய்க்கிழமை கவிழ்ந்தது. இதையடுத்து புதிதாக ஆட்சி அமைக்க பாஜக இன்று ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளது. அக்கட்சியின் சட்டசபை குழுத் தலைவரான எடியூரப்பா, ஆளுநர் வஜுபாய் வாலாவை இன்று சந்தித்து, ஆட்சி அமைக்க கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, ஆளுநரும் அதற்கு அழைப்புவிடுத்துள்ளார்.
இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு முதல்வராக பதவியேற்க உள்ளார் எடியூரப்பா. இதனிடையே இன்னும் ஒரு வாரத்திற்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்று எடியூரப்பா தலைமையில் அமையப்போகும் அரசுக்கு ஆளுநர் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மெஜாரிட்டி
அதிருப்தி எம்எல்ஏக்கள் இரண்டு பேரையும், சுயேச்சை எம்எல்ஏ ஒருவரையும் சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இன்னும் 13 அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களது ராஜினாமாவும் ஏற்கப்படவில்லை. எனவே சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவைப்படும் நம்பர் 111 ஆகும்.

106 பலத்துடன் பாஜக
பாஜகவிடம் சுயேச்சை உறுப்பினர் ஒருவரின் ஆதரவுடன் சேர்த்தால், 106 எம்எல்ஏக்கள் தான் உள்ளனர். எனவே அதிருப்தி எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வராமல் இருந்தால்தான் எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். இந்த நிலையில் ஆளுநர் நிரப்ப அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வார காலம் நேரம் காலக்கெடு விதித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கடந்த முறை வரலாறு
கடந்த 2018ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 113 தொகுதிகளை எந்த கட்சியும் வெல்லவில்லை. 105 சீட்டுகளுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்தார். எடியூரப்பா முதல்வராக பதவிப் பிரமாணம் செய்தார். ஆட்சி பெரும்பான்மையை நிரூபிக்க, 15 நாட்கள் அவகாசம் கொடுத்தார் ஆளுநர் வஜுபாய் வாலா.

24 மணி நேரம்
இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது காங்கிரஸ். 24 மணி நேரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அதற்குள், பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலேயே, ராஜினாமா செய்து வெளியேறினார், எடியூரப்பா. ஆனால் இம்முறை, காங்கிரஸ் அவசரப்படாது என்று தெரிகிறது. ஒரு வார கால அவகாசத்தில் தங்கள் அதிருப்தி எம்எல்ஏக்களில் சிலரையாவது தங்கள் பக்கம் இழந்துவிட்டால் எடியூரப்பா அரசால் பெரும்பான்மை பலத்தை காட்ட முடியாது என்பதால், காங்கிரஸ் இம்முறை சுப்ரீம் கோர்ட் செல்லாது என தெரிகிறது.


Click it and Unblock the Notifications
