Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜீவ் காந்தி செய்த அதே தவறு.. எடியூரப்பா விஷயத்தில் பாஜக போட்ட தப்பு கணக்கு.. காங்கிரஸ் செம ஹேப்பி!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:கர்நாடகாவில் முதல்வராக இருக்கும் எடியூரப்பாவை மாற்றிவிட்டு வேறு ஒருவரை முதல்வராக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ள நிலையில், இது காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு உத்வேகம் அளிக்கக் கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Recommended Video

    Yediyurappa To Resign From Karnataka CM Post? | Leaked Audio | Oneindia Tamil

    வயதை காரணம் காட்டி எடியூரப்பாவை கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், இளம் தலைமுறைக்கு வாய்ப்பு தரவேண்டும் என்பது பாஜக தலைமை திட்டமாக இருக்கிறது.

    இதுவரை இந்திய அளவில் எடியூரப்பா மட்டும்தான் பாஜக வகுத்த வயது வரம்பை மீறி முதல்வராக பதவி வகித்து வருகிறார். அவருக்கு மட்டும் இந்த சிறப்பு சலுகை தரப்பட காரணம், எடியூரப்பாவை எதிர்த்துக் கொண்டு கர்நாடகாவில் பாஜக எதுவும் செய்துவிட முடியாது என்பதுதான் .

    எடியூரப்பா ஆதரவாளர்கள்

    எடியூரப்பா ஆதரவாளர்கள்

    இதனால்தான், எடியூரப்பாவை சமாதானப்படுத்தி அவருடைய ஒப்புதலோடு முதல்வர் பதவியை வேறு ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக காய் நகர்த்தி வந்தது பாஜக. எனவேதான் அவரது ஆதரவாளர்கள் ஷோபா கரந்தலாஜேவிற்கு, சமீபத்தில் மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பின்போது, மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஒருவேளை எடியூரப்பாவை பதவியில் இருந்து விலக்கும் போது தனது ஆதரவாளரான ஷோபாவுக்கு முதல்வர் பதவி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து விடக்கூடாது என்ற திட்டமும் இதில் இருந்துள்ளது.

    எடியூரப்பா சம்மதம்

    எடியூரப்பா சம்மதம்

    இன்னொரு பக்கம்.. உங்கள் ஆதரவாளர்களுக்கு, மத்திய அமைச்சர் பதவி தந்து விட்டோம், உங்களுக்கும் கவுரவமான பதவி தருகிறோம், இளைஞர்களுக்கு வழி விடுங்கள் என்று கெஞ்சாத குறையாக பாஜக தலைமை, எடியூரப்பாவிடம் வலியுறுத்தி வருகிறது. இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எடியூரப்பாவுக்கு மிகவும் பக்கபலமாக இருக்கக்கூடியது அவர் சார்ந்த லிங்காயத்து சமூக மக்கள். கர்நாடகாவில் லிங்காயத்து சமுதாயத்திற்கு நிறைய மடங்கள் இருக்கின்றன, அந்த மடாதிபதிகள் மக்களிடையே செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கிறார்கள். இப்போது எடியூரப்பாவுக்கு ஆதரவாக அவர்கள் வெளிப்படையாக பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

    லிங்காயத்து மடாதிபதிகள் போர்க்கொடி

    லிங்காயத்து மடாதிபதிகள் போர்க்கொடி

    எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கூடாது என்பது பெரும்பாலான லிங்காயத்து மடாதிபதிகளின் வெளிப்படையான கோரிக்கையாக இருக்கிறது. ஒருவேளை அது நடைபெறுமானால் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க லிங்காயத்து மடாதிபதிகள் தயங்கமாட்டார்கள் . பாஜகவுக்கு கர்நாடகத்தில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் . ஏனென்றால் கர்நாடகா முழுக்க பரந்து விரிந்த அளவில் லிங்காயத்து வாக்குகள் உள்ளன. இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியில் உள்ள லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மடாதிபதிகளை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது .

    வீரேந்திர பாட்டில் வாக்கு வங்கி

    வீரேந்திர பாட்டில் வாக்கு வங்கி

    இத்தனைக்கும்.. ஆரம்பம் முதல் லிங்காயத்துகள் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்து வந்த சமுதாயம் கிடையாது. முதலில் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தனர் . அதற்கு காரணம் கர்நாடக முன்னாள் முதல்வர் வீரேந்திர பாட்டீல். ஆனால் காங்கிரஸ் தலைவராக ராஜீவ்காந்தி இருந்தபோது 1990 ஆம் ஆண்டில் முதல்வர் பதவியில் இருந்த வீரேந்திர பாட்டீல் நீக்கம் செய்யப்பட்டார். இதனால் கோபம் அடைந்த லிங்காயத்துகள், காங்கிரசுக்கு எதிராக திரண்டனர் . கர்நாடகாவில் லிங்காயத்துகள் மக்கள் தொகை 17 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 95 தொகுதிகளில் வெற்றி தோல்வியை முழுமையாக தீர்மானிக்கக் கூடிய சக்தியாக அவர்கள் இருக்கிறார்கள்.

    காங்கிரஸ் திட்டம்

    காங்கிரஸ் திட்டம்

    2008ஆம் ஆண்டு மற்றும் 2018 ஆம் ஆண்டு பாஜக, கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பதற்கு இந்த தொகுதிகள் மிக முக்கிய பங்கு வகித்தன. 2017ஆம் ஆண்டில் லிங்காயத்துகளை தனி மதமாக பிரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பிரச்சாரத்தை முன்னெடுத்து . அவர்களது வாக்குகளை பெறுவதற்கு இது உதவும் என்று நினைத்தது. ஆனால் அதுவே காங்கிரசுக்கு எதிராக மாறியது. எனவே பாஜக அதிக தொகுதிகளை வென்றது. இப்போது எடியூரப்பாவுக்கு மாற்றாக மற்றொரு தலைவரை கண்டு பிடிக்க பாஜக தலைமை திணறி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி லிங்காயத்துகள் ஆதரவை தங்கள் பக்கம் மறுபடி இழுத்துக்கொள்ள முழுவீச்சில் களம் இறங்கியுள்ளது.

    எடியூரப்பா தலைவரானது எப்படி

    எடியூரப்பா தலைவரானது எப்படி

    வீரேந்திர பாட்டீல் நீக்கத்தால் காங்கிரஸ் எப்படி லிங்காயத்து வாக்குகளை இழந்ததோ அதேபோல எடியூரப்பா நீக்கத்தால் பாஜக அவர்களது வாக்குகளை இழக்க போகிறது.. இது காங்கிரசுக்கு நல்ல செய்தி என்கிறார்கள் கர்நாடக அரசியல் பார்வையாளர்கள் . எடியூரப்பாவுக்கு லிங்காயத்துகள் மத்தியில் தனித்த செல்வாக்கு பெருகியது 2008ஆம் ஆண்டு முதல் தான். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா ஒக்கலிகர் ஜாதிக்கு நேரடியாக ஆதரவளித்த நிலையில் தங்களுக்கான ஒரு தலைவராக எடியூரப்பாவை லிங்காயத்துகள் முன்னிறுத்த ஆரம்பித்தனர் . பாஜகவில் ஜெகதீஷ் ஷெட்டர் போன்ற சீனியர்கள் லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால், அவர்களை தங்களுக்கான தலைவராக லிங்காயத்துகள் ஏற்பதாக இல்லை.

    பரபரப்பில் கர்நாடக அரசியல்

    பரபரப்பில் கர்நாடக அரசியல்

    எடியூரப்பா முதல்வராக இருக்கும் காலகட்டங்களில் லிங்காயத்து மடங்களுக்கு அதிகப்படியான நிதியை வாரி வழங்கியிருக்கிறார். இதன் மூலம் அந்த சமுதாய மக்களுக்கு பலன் சென்று சேர்ந்து இருக்கிறது. எனவே லிங்காயத்துகள் மத்தியில் அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார் எடியூரப்பா . எடியூரப்பாவுக்கு எதிராக பாஜக எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் காங்கிரசுக்கு மிகப்பெரிய அளவில் அடுத்த சட்டசபை தேர்தலில் நன்மை பயக்கும் . ஒருவேளை எடியூரப்பாவுக்கு வேறு ஒரு சிறப்பான பதவியைக் கொடுத்து அவரது வாயினாலேயே லிங்காயத்து ஆதரவு தங்களுக்கு வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் திரைமறைவில் வலியுறுத்த செய்தால் பாஜக தப்பிக்கும் என்கிறார்கள் விதான சவுதா விவரம் அறிந்தவர்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+