Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்ச்சைகளின் நாயகி.. எடியூரப்பாவின் நிழல்.. அதிக ஓட்டு வாங்கி சாதனை.. யார் இந்த ஷோபா கரந்தலாஜே?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் நம்பிக்கைக்குரியவரான ஷோபா கரந்தலாஜே, மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

Recommended Video

    Who is Shobha Karandlaje | Yediyurappa-வின் நிழல்... மத்திய அமைச்சராக்கிய Modi

    கர்நாடகாவிலேயே, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை கொண்ட ஷோபா கரந்தலாஜே, அரசியலில் அடிமட்டத்தில் இருந்து வளர்ந்து வந்தவர்.

    உடுப்பி-சிக்கமகளூரு தொகுதியிலிருந்து லோக்சபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஷோபா கரந்தலாஜே.

    அதிக ஓட்டு வித்தியாசம்

    அதிக ஓட்டு வித்தியாசம்


    அந்த மாநிலத்தில் சுயேச்சை எம்.பி சுமலதா அம்பரீஷ் மற்றும் பாஜகவின் மங்கள அங்கடி ஆகியோரும் பெண் எம்.பி.க்களாக உள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் ஷோபா கரந்தலாஜே அளவுக்கு அரசியல் மற்றும் நிர்வாக அனுபவம் இல்லாதவர்கள்.
    2019 மக்களவைத் தேர்தலில் 3.49 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஷோபா கரந்தலாஜே. கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பெண் வேட்பாளர் பெற்ற மிகப்பெரிய வாக்கு வித்தியாசம் இதுவாகும்.

    ஜாதி கணக்கு

    ஜாதி கணக்கு

    எடியூரப்பா லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர். அதற்கு அடுத்து பெரும்பான்மையாக உள்ள ஒக்கலிகா சமூகத்தைச் (கவுடா) சேர்ந்தவர் ஷோபா கரந்தலாஜே. லிங்காயத்துகளுக்கு மட்டுமே பாஜக முக்கியத்துவம் தருவதை தவிர்க்க ஷோபா கரந்தலாஜே மத்திய அமைச்சராக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஷோபா கரந்தலாஜே வளர்ச்சி

    ஷோபா கரந்தலாஜே வளர்ச்சி

    ஏபிவிபி உறுப்பினராக மாணவர் பருவம் தொட்டே வலதுசாரி சிந்தனையாளராக அறியப்படுபவர் ஷோபா கரந்தலாஜே. பின்னர் ராஷ்டிர சேவா சமிதி (ஆர்எஸ்எஸ் மகளிர் பிரிவு) தலைவராக இருந்தவர். எடியூரப்பாவின் நிழல் என்று அழைக்கப்படும் ஷோபா கரந்தலாஜே முதன்முதலில் 2004 ல் கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அமைச்சர் பதவியை இழந்த ஷோபா கரந்தலாஜே

    அமைச்சர் பதவியை இழந்த ஷோபா கரந்தலாஜே

    2008 ஆம் ஆண்டில், பெங்களூர் யஷ்வந்தபூர் தொகுதியில் இருந்து மீண்டும் சட்டமன்ற உறுப்பினரானார். கர்நாடக அரசாங்கத்தில் உணவு மற்றும் சிவில் சப்ளைஸ், எரிசக்தி மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட பல அமைச்சகங்களை அவர் வகித்துள்ளார். அப்போது, ஷோபா கரந்தலாஜேவிற்கு கட்சிக்குள் சில ஆண் அமைச்சர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். 2009 ஆம் ஆண்டில் எடியூரப்பாவுக்கும் கட்சியில் அவரது போட்டியாளராக உருவெடுத்த சுரங்க மன்னன், ஜனார்த்தனா ரெட்டிக்கும் கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. சமரசம் செய்ய பாஜக மேலிடம் முயன்றபோது, ஷோபா கரந்தலாஜே ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் ரெட்டி. இதனால் அமைச்சரவையிலிருந்து விலகினார் ஷோபா கரந்தலாஜே.

    ஷோபா கரந்தலாஜே சர்ச்சைகள்

    ஷோபா கரந்தலாஜே சர்ச்சைகள்

    ஷோபா கரந்தலாஜே சர்ச்சைகளுக்கும், தீவிர வலதுசாரி சிந்தனைகளுக்கும் சொந்தக்காரர். 'ஜிஹாதிகள்' 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றனர் என்று தவறாகக் குற்றம் சாட்டியதால், 2017 ஆம் ஆண்டில், கர்நாடகாவின் ஹொன்னவர் போலீசில் ஷோபா கரந்தலாஜேவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இரு சமூகங்கள் இடையே மோதலை ஏற்படுத்த வதந்தி பரப்பப்பட்டதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

     சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர்

    சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர்

    2020ம் ஆண்டு ஜனவரியில், கேரளாவின் மலப்புரத்தில் உள்ள இந்து குடும்பங்கள் சிலர், குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) ஆதரித்ததற்காக அந்த ஊர்க்காரர்கள், தண்ணீர் வழங்கவில்லை என்று பொய்யாகக் குற்றம் சுமத்தினார் ஷோபா கரந்தலாஜே. எனவே, அவர் மீது கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கிறிஸ்தவர்கள் தடுப்பூசிகளுக்கு எதிரானவர்கள் என்று ஷோபா கரந்தலாஜே வதந்தி பரப்பியதாக, 2021ம் ஆண்டு, மே மாதம் மங்களூருவில் உள்ள பாண்டேஸ்வர் போலீசில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+