5 தொகுதி இடைத்தேர்தல்... கர்நாடகாவில் அமைதியாக முடிந்தது வாக்குப்பதிவு!
Recommended Video

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் 2 சட்டசபை மற்றும் 3 நாடாளுமன்றத்தொகுதிகளுக்கு நடந்த தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் ஷிமோகா, பல்லாரி, மாண்டியா ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் , ராம்நகர், ஜம்கண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கும் உறுப்பினர்கள் இல்லாமல் இருந்தனர். இந்நிலையில் இந்த 5 தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவானது நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் கட்சிகள் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பாஜக சார்பில் 5 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இந்த தேர்தலில் போட்டியிடும் பாஜகவும், காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என கூறி வருகின்றனர்.
இடைத்தேர்தலுக்காக 5 தொகுதிகளிலும் மொத்தம் 6,453 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 57 வாக்குச்சாவடிகள் 'பிங்க்' எனப்படும் இளஞ்சிவப்பு வாக்குச்சாவடிகள் ஆகும். அவற்றில் பெண் ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற உள்ளனர். இந்த இடைத்தேர்தலில் 54 லட்சத்து 54 ஆயிரத்து 275 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 27 லட்சத்து 21 ஆயிரத்து 85 பேரும், பெண் வாக்காளர்கள் 27 லட்சத்து 30 ஆயிரத்து 949 பேரும், பிற வாக்காளர்கள் 462 பேரும், தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்காளர்கள் 1,779 பேரும் உள்ளனர். இதையொட்டி 5 தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த இடைத்தேர்தல் களத்தில் மொத்தம் 31 வேட்பாளர்கள் உள்ளனர். மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 6 மணிக்குள்ளாக வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டன. வாக்குப்பதிவு முடிந்த தொகுதிகளில் வாக்குப்பெட்டிகள் சீலிடப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
5 தொகுதி இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 43 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. பெல்லாரி தொகுதியில் 47 சதவிகித வாக்குகளும், ஷிமோகாவில் 41.49 சதவிகிதமும், மாண்டியாவில் 37.7 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. சட்டசபை தொகுதிகளான ஜம்கண்டியில் 58.82 சதவிகித வாக்குகளும், ராம்நகரில் 54.76 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications