கொரோனா பல மடங்கு அதிகரிக்க... படித்த உயர் வர்க்கத்தினரின் அலட்சிய போக்கே காரணம்.. அமைச்சர் சாடல்
பெங்களூரு: அபார்ட்மெண்ட்களில் வசிக்கும் படித்த உயர் நடுத்தர வர்க்கத்தினரின் அலட்சிய செயல்கள் காரணமாகவே பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக அம்மாநில அமைச்சர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய பெருநகரங்களில் வைரஸ் பாதிப்பு மிக மோசமாக உள்ளது.
குறிப்பாக, பெங்களூருவில் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கர்நாடகாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், தினசரி கொரோனா பாதிப்புகள் குறைந்ததாக தெரியவில்லை.

ஐடி ஊழியர்கள்
பெங்களூருவில் ஏழு மண்டலங்களிலும் வைரஸ் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. குறிப்பாக ஐடி பணியாளர்கள் அதிகம் வசிக்கும் மகாதேவபுரா-வைட்ஃபீல்ட் பகுதியில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. இதையடுத்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்துத் திட்டத்தை உருவாக்க வனத்துறை அமைச்சர் அரவிந்த் லிம்பாவாலி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பைரதி பசவராஜ் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது.

முக்கிய ஆலோசனை
சுமார் நான்கு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அபார்ட்மெண்ட்களில் வசிக்கும் படித்த உயர் நடுத்தர வர்க்கத்தினரின் அலட்சிய செயல்கள் காரணமாகவே கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். மேலும், கடந்த ஆண்டைப் போல கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

யாரிடமும் சொல்வதில்லை
இது குறித்து அமைச்சர் அரவிந்த் லிம்பாவாலி கூறுகையில், "அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள், கொரோனா உறுதி செய்யப்பட்டவுடன், தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். மருத்துவர்களிடம் இருந்து நேரடியாக மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் இவர்கள், சுற்றியிருக்கும் யாரிடமும் தங்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை சொல்வதில்லை.

அலட்சியம்
அவர்களில் பலர் தங்கள் வீடுகளில் வேலை செய்பவர்கள் பணிக்கு வரக் கட்டாயப்படுத்துகிறார்கள். ஒரே நபர் பல வீடுகளில் வேலை செய்வதாலும் அவர்கள் லிஃப்ட் உள்ளிட்ட பொது இடங்களைப் பயன்படுத்துவதாலும், தங்களை அறியாமலேயே சூப்பர் ஸ்ப்ரெடர்களாக மாறுகிறார்கள். இதற்குப் படித்தவர்களின் அலட்சியமே முழுக்க முழுக்க காரணம் என்றார்.
-
‘பப்ஜி' கேமால் சிதைந்த குடும்பம்.. தந்தை - அக்காளை கொன்ற இளைஞர்.. தாய் உயிருக்கு போராட்டம் -
கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு சூனியம்? பெங்களூர் வீட்டருகே தலையின்றி கிடந்த சேவல் + எலுமிச்சையால் ஷாக் -
பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான குட்நியூஸ்! செம -
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications