தமிழகத்துக்கு காவிரி நீரா? கர்நாடகாவை ஏமாற்றிய காங்கிரஸ்! பெங்களூர் போராட்டத்தில் முழங்கிய பொம்மை
பெங்களூர்: தமிழ்நாட்டுக்கு காவிரி நதி நீரை திறந்துவிட்ட கர்நாடகா காங்கிரஸ் அரசை கண்டித்து பெங்களூரில் இன்று பாஜக தலைவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் முன்னாள் முதல்வர் பசவராஜ் கர்நாடகா அரசை கடுமையாக விமர்சனம் செய்ததோடு, உடனே தமிழகத்துக்கான தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும் என முழங்கினார்.
காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து பெங்களூரில் நேற்று பாஜக ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்துக்குப் பின் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‛‛கர்நாடகா அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்கக் கூடாது என முடிவெடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது கர்நாடகா அரசு முறையாக வாதிடவில்லை. கர்நாடகாவின் வறட்சி நிலவரத்தை உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைக்கவும் இல்லை. இதனால்தான் தமிழ்நாட்டுக்கு 7.5 டிஎம்சி நீரை தர வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டது.
பெங்களூர் நகரத்தில் இன்று பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும். காவிரி பிரச்சனையில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துவிட்டது. இந்த தோல்வியை மறைக்கப் பார்க்கின்றனர். கர்நாடகா மக்களுக்கு காங்கிரஸ் அரசு துரோகம் செய்துவிட்டது'' என கூறினார்.
இதையடுத்து இன்று பெங்களூரில் நடந்த போராட்டத்தில் பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். பெங்களூர் மைசூர் வங்கி சர்க்கிளில் நடந்த போராட்டத்தில் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, முன்னாள் அமைச்சர்கள் கோவிந்த் கார்ஜோர், கோபாலய்யா உள்பட பலர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் பசவராஜ் பொம்மை கர்நாடகா அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இததொடர்பாக அவர் கூறியதாவது:
கர்நாடகா காங்கிரஸ் அரசு நம் மாநில மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை. மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்த நிலவரத்தை நீதிமன்றத்தில் எடுத்து வைப்பதில் தோல்வியடைந்து விட்டது. இங்கு குடிக்க நீர் இல்லாதபோது தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பு சரியான அணுகுமுறையாக இருக்காது. இதனால் தமிழ்நாட்டுக்கு திறக்கும் தண்ணீரை உடனே நிறுத்த வேண்டும்.
கர்நாடக மக்கள் சட்டசபை தேர்தலில் உங்களுக்கு ஓட்டளித்து ஆட்சியை கொடுத்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சி கர்நாடகா மக்களை ஏமாற்றி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் திமுக உள்ளது. இந்த கூட்டணிக்காக தமிழ்நாடு கேட்கும் முன்பே கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இது சரியான நடைமுறை அல்ல.
மேலும் கர்நாடகா வறட்சி நிலவரத்தை நீதிமன்றத்தில் எடுத்து கூற வேண்டும். மேல்முறையீடு செய்ய வேண்டும். காவிரி, விவசாய பிரச்சனைகளை முறையாக கையாள வேண்டும். ஆனால் காங்கிரஸ் அரசு அதில் இருந்து தவறிவிட்டது. இந்த பிரச்சனையில் பாஜக எந்த ஒரு அரசியலையும் செய்யவில்லை. மாறாக மாநிலத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என பாஜக வலியுறுத்துகிறது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications