Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பார்ப்பது ரஜினியின் ‛ஜெயிலர்’ படம்! போராட மட்டும் நாங்க வேண்டுமா? கன்னட நடிகர் தர்ஷன் ஆக்ரோஷம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் பார்ப்பது தமிழ் படம்.. ஆனால் காவிரி விஷயத்தில் போராட மட்டும் கன்னட நடிகர்கள் வேண்டுமா? எனும் வகையில் கன்னட நடிகர் தர்ஷன் ஆக்ரோஷமாக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே காவிரி நீர் பங்கீடு செய்வதில் நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

Cauvery row: Kannada actor Darshan indirect jibe at the success of Rajinikanth’s ‘Jailer’ in Karnataka

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்த தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் 15 நாட்கள் முடிவடைய உள்ளதால் இந்த தண்ணீர் திறப்பு என்பது இன்று அல்லது நாளையுடன் நிறுத்தப்பட உள்ளது.

இதற்கிடையே தமிழகத்துக்கான தண்ணீர் திறப்பை உடனே நிறுத்த மண்டியாவில் பந்த் நடந்தது. இன்று பெங்களூரில் பந்த் நடந்து வருகிறது. மேலும் வரும் 29 ம் தேதி கர்நாடகா முழுவதும் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் காவிரி விஷயத்தில் கர்நாடகாவில் நடக்கும் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கன்னட திரையுலகை பல்வேறு அமைப்பினர் கேட்டு வருகின்றனர்.

மேலும் காவிரி விஷயத்தில் கர்நாடகாவை சேர்ந்த நடிகர், நடிகைகள் ஆதரவுக்குரல் கொடுப்பது இல்லை. போராட்டத்தில் பங்கேற்பது இல்லை என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் தர்ஷன் பேசும்போது கூறியதாவது:

கன்னட நடிகர்கள் அந்த போராட்டத்துக்கு வரவில்லை. இந்த போராட்டத்துக்கு வரவில்லை என சொல்கிறார்கள். சமீபத்தில் ஒரு தமிழ் திரைப்படம் வெளியானது. இந்த தமிழ் திரைப்படத்தின் விநியோக உரிமையை விநியோகஸ்தர் ஒருவர் ரூ.6 கோடிக்கு வாங்கினார். ஆனால் அந்த படம் ரூ.36-37 கோடி வசூல் செய்தது.

இதை தமிழர்கள் பார்த்தார்களா? கர்நாடகாவில் இருந்து 36-37 கோடி ரூபாய் போனது எப்படி? ஏன் அவரிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. இதுபோல் கன்னட திரைப்படங்களுக்கு கொடுக்கிறீர்களா? கன்னட திரைப்படங்களுக்கு கொடுத்தால் தான் கன்னட கலைஞர்கள் வருவார்கள். மேலும் நான் அந்த தமிழ் படத்தில் நடித்தவர்கள் பற்றி பேசவில்லை. அவர்கள் சிறந்த கலைஞர்கள். நிலைமை இப்படி இருக்க தர்ஷன், சிவண்ணா(சிவராஜ் குமார்), சுதீப், யஷ், அபிசேக் உள்ளிட்டவர்களின் மவுனம் குறித்து மட்டும் கேள்வி கேட்கப்படுகிறது.

நானும் கூட விவசாயி தான். நான் எருமை மாடுகள் வளர்க்கிறேன். பால் விற்பனை செய்கிறேன். அதோடு நான் விவசாயத்துக்கு காவிரி நீரை தான் பயன்படுத்தி வருகிறேன். நீங்கள் அவர்களின் படத்தை காசு கொடுத்து பார்க்கிறீர்கள். அவர்களை நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். எங்களிடம் குடிப்பதற்கு போதுமான தண்ணீர் இல்லை. எப்படி தண்ணீர் விடுவது என தெரிவித்துள்ளனர்" என்றார்.

நடிகர் தர்ஷன் தமிழ் படம் என குறிப்பிட்டு இருப்பது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் என கூறப்படுகிறது. இந்த திரைப்படம் பெங்களூர் மட்டுமின்றி கர்நாடகாவில் நன்றாக ஓடியது. இதனை தான் தர்ஷன் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியின் ஜெயிலர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் நடித்திருந்தார். இத்தகைய நிலையில் தான் நடிகர் தர்ஷன் இப்படி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+