செம ஹேப்பி! ஆரம்பத்திலேயே எகிறிய காங்கிரஸ்.. டெல்லியிலேயே தொடங்கியது கொண்டாட்டம்! இதை பாருங்களேன்
பெங்களூர்: கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆரம்பம் முதலே காங்கிரஸ் முன்னிலை எனத் தகவல் வெளியாகும் நிலையில், அக்கட்சி தொண்டர்கள் செம ஹேப்பியாக உள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த புதன்கிழமை சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அங்கே மொத்தம் 224 தொகுதிகள் இருக்கும் நிலையில், அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.

அங்கே 224 தொகுதிகள் இருக்கும் நிலையில், 113 இடங்களில் வெல்லும் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கும். இதனால் அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஓல்ட் மைசூர் உள்ளிட்ட இடங்களில் ஜேடிஎஸ் கட்சியும் போட்டி தருகிறது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், எக்ஸிட் போல்கள் சிலவற்றில் அங்கே தொங்கு சட்டசபை அமையும் எனக் கூறப்பட்டிருந்தது.
அப்படித் தொங்கு அமைந்தால் கடந்த தேர்தலைப் போல ஜேடிஎஸ் மீண்டும் அங்கே கிங் மேக்கராக உருவாகும் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் காங்கிரஸ் மற்றும் பாஜக என இரு கட்சிகளுமே நேற்று வரை, தாங்கள் பெரும்பான்மையுடன் வெல்வோம் என்றும் தங்களுக்கு ஜேடிஎஸ் கட்சியின் ஆதரவு தேவைப்படாது என்றே கூறி வந்தனர். நேற்றிரவு கூட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இதையே கூறியிருந்தார்.
இதனிடையே இன்று கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இதுவரை வைத்துப் பார்க்கும் போது காங்கிரஸ் 110க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. தற்போதுள்ள சூழலை வைத்துப் பார்க்கும் போது, காங்கிரஸ் எளிதாகப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெற்றுவிடும் என்றே தெரிகிறது. ஜேடிஎஸ் கட்சியின் ஆதரவு இல்லாமலேயே காங்கிரஸ் கூட்டணியை அமைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்படி ஆட்சியை அமைத்தால் கடந்த சில ஆண்டுகளில் ஹிமாச்சல பிரதேசத்திற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் ஆட்சியை அமைக்கும் மாநிலமாகக் கர்நாடகா இருக்கும். இந்தத் தேர்தல் வெற்றிக்குக் கர்நாடகாவில் இருக்கும் வலுவான காங்கிரஸ் தலைவர்களே முக்கிய காரணமாகும்.
கர்நாடக தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கர்நாடகாவில் பல இடங்களில் இப்போது காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
மேலும், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையகத்தில் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. தேர்தல் முடிவுகள் தங்களுக்குச் சாதகமாகவே வரும் என்று மக்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
கர்நாடகாவில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அங்கே இருக்கும் 36 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து தேர்தல் நாளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன
தபால் வாக்குகளில் பல தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிப்பது போலவே தெரிந்தது. இருப்பினும், அது முடிந்து வாக்குப்பதிவு தொடங்கிய உடனேயே டிரெண்டி மாறியது. பல இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலைக்கு வந்துவிட்டது. பாஜக பல இடங்களில் பின்னடைவையே சந்தித்துள்ளது. குறிப்பாக இந்தத் தேர்தலில் போட்டியிட்ட பல பாஜக அமைச்சர்களும் கூட பின்னடைவையே சந்தித்துள்ளனர்.
இவை எல்லாம் சேர்ந்தே காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications