”கல்வி மாநிலங்களின் உரிமை” - தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் குரலுக்கு வலுசேர்க்கும் கர்நாடகா!
பெங்களூர்: கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்; நீட் போன்ற கொடூர தேர்வுகளை ஒழிக்க இதுதான் ஒரே வழி என்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு விவகாரத்தில் மாநில பட்டியலுக்கு கல்வியை மீண்டும் கொண்டுவர வேண்டும்; அதுதான் தீர்வாக இருக்க முடியும் என்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக பல மாநிலங்களின் முதல்வர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்நிலையில் கர்நாடகா மாநில அமைச்சர் தினேஷ் குண்டுராவும், கல்வி என்பது மாநிலங்களின் உரிமை என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையை ஆளும் காங்கிரஸ் அரசு கைவிட முடிவெடுத்துள்ளது. இதற்கு அம்மாநில பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கர்நாடகா மாநில அரசின் புதிய கொள்கையை கைவிடும் முடிவுக்கு கண்டனம் தெரிவித்த அம்மாநில முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, இது முட்டாள்தனமானது. நாட்டில் பல ஆண்டுகளாக புதிய கல்வி கொள்கை நடைமுறையில் இருந்து வருகிறது. புதிய கல்வி கொள்கை வரைவுக்கு முந்தைய சித்தராமையா அரசும் ஒப்புதல் தந்திருக்கிறது. இதில் சிறிய மாற்றங்களைத்தான் செய்யலாம். அதற்காக ஒட்டுமொத்தமாகவே கைவிடுவது என்பது மக்களை போராட்டத்தில் குதிக்க வைக்கும் என எச்சரித்திருந்தார்.
இதற்கு கர்நாடகா அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அளித்த பதில்: கல்வி என்பது மாநிலங்களுக்கு உரியது. மாநில பட்டியலில்தான் கல்வி இருந்தது. மாநிலங்கள் மீது டெல்லி ஏன் கொள்கைகளை திணிக்க வேண்டும்? மாநிலங்களின் மீது கல்வி சார்ந்த கொள்கைகளை மத்திய அரசால் திணிக்க முடியாது. எங்களுக்கு என சொந்த கல்வி கொள்கை இருக்கிறது. எங்கள் கல்வி கொள்கையை டெல்லி தீர்மானிக்க முடியாது. இந்தியா கூட்டாட்சி கட்டமைப்பைக் கொண்டது. இதில் பசவராஜ் பொம்மை வாயே திறக்காமல் இருக்க வேண்டும். நாம் ஒன்றும் அடிமைகள் அல்ல. கர்நாடகா மாநில கல்வி கொள்கைக்கு தம்மால் முடிந்த பங்களிப்பை பசவராஜ் பொம்மை வழங்க வேண்டும். இவ்வாறு கர்நாடகா அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications