ஆஹா! வேலையை கச்சிதமாக செய்த ரோவர்.. நிலவில் வெப்பநிலை எந்த அளவு இருக்கு.. லேண்டர் அனுப்பிய மெசேஜ்
பெங்களூர்: நிலவின் மேற்பரப்பு வெப்ப நிலையை ஆய்வு செய்த தகவலை லேண்டர் அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ரோவரில் உள்ள ஆய்வு கருவி நிலவின் மேற்பரப்பு வெப்ப நிலையை ஆய்வு செய்துள்ளது.
இஸ்ரோ என்று சொல்லப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்வெளித்துறையில் பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக சந்திரயான் திட்டங்களின் மூலம் நிலவு குறித்த ஆராய்ச்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. சந்திரயான்1 மற்றும் சந்திரயான் 2 விண்கலனை அனுப்பி நிலவு குறித்த ஆராய்ச்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வந்ததது. இந்த நிலையில், கடந்த மாதம் (ஜூலை) 14-ந் தேதி சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.

40 நாட்கள் பயணம் மேற்கொண்ட இந்த சந்திரயான் விண்க கடந்த 23-ந் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து ரோவர் கருவி வெளியே வந்தது. இந்த ரோவர் கருவி தற்போது நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
பெங்களூர் பீனியாவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் செயல்பாடுகள் மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்த தகவல்களை கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று இஸ்ரோ வெளியிட்ட தகவலில், பிரக்யான் ரோவர் சிறப்பாக இயங்கி வருகிறது. ரோவரில் பொருத்தப்பட்டு இருக்கும் அனைத்து கருவிகளும் சிறப்பாக செயல்படுகிறது" என்று கூறியிருந்தது.
இந்த நிலையில், நிலவின் தென் துருவத்தில் வெப்ப நிலை எப்படி இருக்கும் என்ற தகவலை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் பல்வேறு ஆழங்களில் நிலவும் வெப்பத்தை பிரக்யான் ரோவர் பதிவு செய்துள்ளது. ரோவர் கருவியில் 10 விதமான சென்சார் கருவிகள் உள்ளன. இந்த சென்சார் கருவிகளே வெப்பநிலையை ஆய்வு செய்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் இருந்து 10 செ.மீ ஆழம் வரையிலான வெப்ப நிலை குறித்து ஆய்வு செய்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் சராசரி வெப்ப நிலை பதிவு செய்வது இதுவே முதல் முறையாகும். நிலவின் தென் துருவத்தில் நிலவும் வெப்ப நிலை குறித்து வரைபடம் மூலம் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இதில், பல்வேறு ஆழங்களில் நிலவின் வெப்ப நிலை மாறுபடுவது தெரியவந்துள்ளது. ரோவரில் இருக்கும் ChaSTE எனப்படும் கருவி வெப்ப நிலையை ஆய்வு செய்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications