Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சந்திரயான் 3 வெற்றி.. இஸ்ரோ தலைவர் சோம்நாத் பாராட்டிய விஞ்ஞானி வீரமுத்துவேல்.. யார் இவர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: சந்திரயான் 3 தனது பயணத்தை வெற்றி பயணமாக்கியுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்பகுதியில் தரையிறங்கி சரித்திர சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியை இந்திய மக்கள் கொண்டாடி வரும் நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்த திட்டத்தில் முக்கிய பங்காற்றிய விஞ்ஞானி வீரமுத்துவேல் பற்றி குறிப்பிட்டு பாராட்டினார். யார் இவர் என்று பார்க்கலாம்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 (எல்விஎம் 3) ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் கடந்த 14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

Chandrayaan-3 success: Scientist P Veeramuthuvel praised by ISRO chief Somnath Who is he?

சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து உந்துவிசை கலன், லேண்டர் ஆகஸ்ட் 17 ஆம் தேதி தனித்தனியாக பிரிந்தது. தனியாக பிரிந்த லேண்டரின் உயரம் ஒவ்வொரு கட்டமாக குறைக்கப்பட்டு நிலவை நோக்கி பயணித்தது. இன்றைய தினம் நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்து உள்ளது. சந்திரயான் 2 திட்டம் பாதி தோல்வி அடைந்த நிலையில் சந்திரயான் 3 திட்டம் தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டையும் மீண்டும் நிலவில் வெற்றிகரமாக இஸ்ரோ களமிறக்கி உள்ளது.

இந்த வெற்றியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமல்ல நாட்டு மக்களே கொண்டாடி வருகின்றனர். சரித்திர சாதனையாக பார்க்கப்படுகிறது. உலகமே இந்த சாதனையை உற்று நோக்கி வருகிறது. இஸ்ரோ தலைவர் சோமநாத் இந்த வெற்றியை கொண்டாடும் அதே நேரத்தில் வெற்றிக்கு காரணமான விஞ்ஞானிகளையும் பாராட்டினார். விஞ்ஞானிகள் இரவு பகலாக பணியாற்றியுள்ளனர்.

Chandrayaan-3 success: Scientist P Veeramuthuvel praised by ISRO chief Somnath Who is he?

சந்திரயான் 3 வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றியவர் விஞ்ஞானி வீரமுத்துவேல் என்று குறிப்பிட்டு பாராட்டினார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். இவர் ஒரு தமிழர் என்பது பெருமைக்குரிய விசயம். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வீரமுத்துவேலின் தந்தை தெற்கு ரயில்வேயில் டெக்னிஷியனாக பணிபுரிந்து வந்தார். வீரமுத்துவேல் விழுப்புரத்தில் உள்ள ரயில்வே பள்ளியில்தான் படித்தார்.

பள்ளிப்படிப்பிற்குப் பிறகு மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ படித்த வீரமுத்துவேலுக்கு விண்வெளி துறையின் மீது இருந்த ஆர்வம் காணமாக சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். திருச்சி REC கல்லூரியில் பொறியியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார் சென்னை ஐஐடியில் உயர்கல்வி படித்தார். பின்னர் ஏரோ ஸ்பேஸ் துறையில் சில முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டார்.

தனது கடின உழைப்பால் வீரமுத்துவேலுக்கு இஸ்ரோவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. பல ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் வந்த போதிலும் இஸ்ரோ வேலையையே தேர்வு செய்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில், வீரமுத்துவேல். விண்கலத்தின் மின்னணுப் பொதியில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள முறை குறித்த தனது கட்டுரையை வழங்கினார். அவரது ஆய்வு கட்டுரை குறித்து பெங்களூரில் உள்ள யு.ஆர். ராவ் செயற்கைகோள் மையத்தில் சோதனை நடத்தப்பட்டது. இவர் கண்டறிந்த இந்த தொழில்நுட்பம் நிலவில் லேண்டரை தரையிறக்குவதற்கும் ரோவரை இயக்குவதற்கும் உதவிகரமாக இருக்கும் என கூறப்பட்டது. இதனால் அந்த தொழில்நுட்பம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இதுவே வீரமுத்துவேலை 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 3 திட்ட இயக்குநராக்கியது. சந்திரயான் 2 திட்டத்திலும் வீரமுத்துவேல் முக்கியப் பங்காற்றினார், அப்போது திட்டத்தின் நாசா உடனான ஒருங்கிணைப்பை முற்றிலுமாக வீரமுத்துவேல் ஏற்றுக்கொண்டிருந்தார்.

இவர் கண்டறிந்த இந்த தொழில்நுட்பம் நிலவில் லேண்டரை தரையிறக்குவதற்கும் ரோவரை இயக்குவதற்கும் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அந்த தொழில்நுட்பம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இதுவே வீரமுத்துவேலை சந்திரயான் 3 திட்ட இயக்குநராக்கியது. இவரது மேற்பார்வையில் உருவாக்கப்பட்டுள்ள சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் கால் பதித்துள்ளது. இந்த வெற்றியை வீரமுத்துவேல் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். பலநாள் உழைப்பு.. தனது கனவு நனவான மகிழ்ச்சியில் இருக்கின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+