இவ்வளவு ரிஸ்கா? நிலவின் பள்ளத்தாக்கு அருகே நிகழும் அற்புதம்! விக்ரம் லேண்டர் தரையிறங்குவது இங்குதான்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நிலவின் தென்துருவத்தில் இன்று மாலை 6.04 மணிக்கு சந்திரயான் - 3யின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்க உள்ளது. இந்நிலையில் தான் நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பகுதி எது? அதன் பெயர் என்ன? அந்த பகுதி எப்படிப்பட்டது? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா விண்வெளி துறையில் பிற உலக நாடுகளுக்கு சவால் அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த விண்வெளி திட்டத்தின் பெரிய சாதனையை நிகழ்த்த இன்று இந்தியா காத்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் இந்த வெற்றியை உலக நாடுகள் உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளன.

 Chandrayaan 3 Vikram Lander may landing between on moons Boguslawski and Mancinus Valley

இதற்கு முக்கிய காரணம் நிலவை ஆய்வு செய்யும் இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் தான். பூமியின் துணைகேளான நிலவை ஆராய இந்தியா வகுத்த திட்டம் தான் சந்திரயான். சந்திரயான் முதல் திட்டம் என்பது 2008 ல் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தான் நிலவு குறித்த ஆய்வுக்கு இந்தியாவுக்கு பிள்ளையார் சுழி போட்டது. இந்த திட்டம் திட்டமிட்டபடி வெற்றி பெற்றது.

இதையடுத்து கடந்த 2019ல் சந்திரயான் 2 திட்டத்தை இந்தியா செயல்படுத்தியது. ராக்கெட் மூலம் ஆர்ப்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் வாகனம் உள்ளிட்டவற்றுடன் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆர்ப்பிட்டர் நிலவின் சுற்றுவட்டபாதையில் வலம் வரும் நிலையில் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்க முயற்சித்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியது. இதனால் பிரக்யான் ரோவர் வாகனத்தால் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய முடியவில்லை.

இதையடுத்து தற்போது சந்திரயான் 3 திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ராக்கெட் மூலம் ப்ரொபல்ஷன் மாடூல் எனும் உந்துவிசை கலன், விக்ரம் லேண்டர், ரோவர் ஆகியவை நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து முந்தைய சந்திரயான் 2 திட்டத்தின் ஆர்ப்பிட்டருடன் தொடர்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இன்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க உள்ளது.

இது வெற்றிகரமாக நிகழ்த்தப்பட உள்ளது. விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் காட்சியை இஸ்ரோ இன்று மாலை 5.20 மணி முதல் நேரடியாக ஒளிபரப்ப உள்ளது. அதன்பிறகு படிப்படியாக விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க உள்ளது. இந்த நிமிடம் என்பது இந்திய விண்வெளி துறையில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தருணாமாகும்.

ஏனென்றால் வளர்ந்த நாடுகளான ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்டவை மட்டுமே நிலவில் கால்பதித்துள்ளது என்ற பெருமையில் இந்தியாவும் தனது பெயரை இணைக்க உள்ளது. இதுமட்டுமின்றி நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனையையும் இந்தியா படைக்க இருக்கிறது. நிலவின் தென்துருவம் என்பது மிகவும் மோசமான பகுதியாகும்.

இங்கு பல இடங்களில் சூரியஒளி படாத நிலை உள்ளது. இதனால் உடலையே உறைய வைக்கும் குளிர் அங்கு நிலவுகிறது. புரியும்படி கூற வேண்டும் என்றால் -230 டிகிரி செல்சியஸ் வரையிலான குளிர் என்பது நிலவின் தென்துருவத்தில் இருக்குமாம். மேலும் நிலவின் தென்துருவம் என்பது கரடுமுரடான பள்ளத்தாக்கு போன்ற பள்ளங்களை கொண்ட இடமாக இருக்கிறது. இதனால் இங்கு விண்வெளி ஆய்வுக்கலனை வெற்றிக்கரமாக தரையிறக்குவது பெரும் சவாலாகும்.

அதோடு நிலவில் இறங்கும் ஆய்வுக்கலன் சூரியஒளி மூலம் இயங்கும் திறன் கொண்டவையாகும். ஆனால் தென்துருவத்தில் சூரியஒளி என்பது பல இடங்களில் கிடைக்காமல் குளிர் நிலவும் என்பதால் தென்துருவத்தில் ஆய்வுக்கலனை தரையிறக்கி அதனை செயல்பட வைப்பது என்பது எளிமையான காரியமே கிடையாது. இதனால் தான் உலக வல்லரசு நாடுகளே நிலவின் தென்துருவ ஆய்வில் இருந்து விலகி நிற்கின்றன.

ஆனால் இந்தியா தனது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இன்று சந்திரயான் - 3 லேண்டரை நிலவின் தென்துருவத்தில் தரையிறக்க உள்ளது. விக்ரம் லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் உள்ள போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் எனும் இரு பள்ளத்தாக்கு பகுதியின் அருகே வெற்றிகரமாக இன்று தரையிறங்க உள்ளது. இந்த பள்ளத்தாக்கு பகுதி நிலவின் தென்துருவத்தில் இருந்தாலும் இங்கு பூமியின் கணக்குப்படி 14 நாட்கள் சூரியஒளி விழுந்து பகல் நேரமாக இருக்கும். அடுத்த 14 நாட்கள் என்பது சூரியஒளி இன்றி இருட்டாக இருக்கும்.

இத்தகைய சூழலில் தான் இன்று நிலவின் தென்துருவத்தில் உள்ள போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கில் சூரியஒளிபட்டு அடுத்த 14 நாட்கள் பகலாக இருக்கும். இதனை கணித்து தான் இன்று சந்திரயான் 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறங்க உள்ளது. இந்த பள்ளத்தாக்கு அருகே உள்ள சமதள பரப்பை விக்ரம் லேண்டர் கண்டறிந்துள்ளது. இங்கு தான் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது.

ஏனென்றால் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நான்கு கால்கள் சரியான சமதள பரப்பில் தரையிறங்குவது அவசியமாகும். மாறாக ஏதேனும் ஒரு கால்கள் பள்ளத்தாக்கு பகுதியில் இறங்கினால் அது லேண்டரை கீழே சாய்த்துவிடும். இதனால் இந்த படிநிலை என்பது ரொம்ப ரிஸ்க்கான ஒன்றாகும். இருப்பினும் இதனை சிறப்பாக கையாள விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு முன்பு 15 வினாடிகளுக்கு முன்பும் இந்த தரையிறங்கும் பகுதியில் பள்ளங்கள் ஏதும் உள்ளதா? என்கிற ஆபத்தை முன்கூட்டியே கண்டறிந்து அலர்ட் செய்யும் கேமரா படம்பிடித்து காட்டும். அந்த இடம் சரியானதாக இருக்கும்பட்சத்தில் விக்ரம் லேண்டர் அடுத்த 15 வினாடிகளில் அங்கு தரையிறங்கி சாதனை படைக்கும்.

அதன்பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வரும் பிரக்யான் ரோவர் எனும் வாகனம் மெல்ல மெல்ல நகர்ந்து நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும். அதில் உள்ள கேமராக்கள் நிலவை படம்பிடித்து விக்ரம் லேண்டர் மற்றும் சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்ப்பிட்டர் உதவியுடன் பூமிக்கு அனுப்பி வைக்க உள்ளது.

இந்த ரோவர் வாகனம் என்பது நிலவின் தென்துருவத்தில் 14 நாட்கள் ஆய்வு செய்யும். அதன்பிறகு அங்கு சூரியஒளி படாத நிலை ஏற்படும். இதனால் அந்த பகுதி என்பது இருட்டாக மாறும். இதனால் விக்ரம் லேண்டர், ரோவரில் உள்ள சூரியஒளி தகடுகள் செயல்படுவதில் பிரச்சனை ஏற்படலாம். இருப்பினும் கூட விக்ரம் லேண்டர் முதல் 14 நாட்கள் மட்டுமே நிலவை ஆய்வு செய்யும் என இப்போதே கூறிவிட முடியாது. மாறாக நவீன தொழில்நுட்ப யுக்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் கூடுதல் நாட்களும் ஆராய்ச்சி செய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் சூரியஒளி இல்லாதபோதும் ரோவர், விக்ரம் லேண்டர் உள்ளிட்டவை ஆய்வுகளை தொடருமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+