நிலவில் கால் வைத்த சந்திரயான் 3! பில்லியனர் லிஸ்டில் அடி வைத்த ரமேஷ் குன்ஹிகண்ணன்! யார் இவர்?எப்படி?
பெங்களூர்: சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் மைசூர் தொழிலதிபர் ஒருவர் பில்லியனராகியுள்ளார். எப்படி என தெரியுமா?
உலக நாடுகளே செய்யாத ஒரு சாதனையை இந்தியா படைத்துள்ளது. அதாவது நிலவில் சந்திரயான் 3 கால் பதித்ததைத்தான் சொல்கிறோம். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை பதித்திருந்தாலும் தென் துருவத்தில் சாப்ட் லேண்டிங் மூலம் பதித்தது இந்தியாதான்.

இது விண்வெளித் துறையில் பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த சாதனைக்கு சந்தியரான் 3 திட்டத்தில் உள்ள விஞ்ஞானிகளும் திட்ட இயக்குநர் வீர முத்துவேல் உள்ளிட்டோரும் முக்கிய பங்கு வகித்தனர்.
அது போல் அந்த சந்திரயான் 3 திட்டத்திற்கு பல்வேறு கருவிகளையும் உபகரணங்களையும் சப்ளை செய்தவர் 60 வயதான ரமேஷ் குன்ஹிகண்ணன். இவருக்கு 60 வயதாகிறது. அவர் மைசூரில் கெய்ன்ஸ் என்னும் நிறுநனத்தை நடத்தி வருகிறார். இவர் எலக்ட்ரிக்கல் என்ஜீனியர் ஆவார்.
சந்திரயான் 3 திட்டத்திற்கு தேவையான ரோவர் மற்றும் லேண்டர் இரண்டையும் இயக்குவதற்கான மின்னணு அமைப்புகளை இந்த நிறுவனம் தான் வழங்கியது. கடந்த ஆண்டு மும்பை பங்குச் சந்தையில் அவரது நிறுவனத்திற்கு இருந்த பங்குகளின் விலை சந்திரயானுக்கு பிறகு 3 மடங்கு வளர்ச்சியை பெற்றுள்ளது. தற்போது அந்த நிறுவனத்தின் பங்குகள் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
கெய்ன்ஸ் நிறுவனத்தில் குன்ஹிகண்ணனுக்கு 64 சதவீதம் பங்குகள் இருக்கிறது. இவருடைய நிகர சொத்து மதிப்பு 1.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் சர்கியூட் போர்ட்டுகளை அசம்பிள் செய்வது தயாரிப்பதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு 137 மில்லியன் டாலர் ஆண்டு வருமானம் கிடைக்கிறது.

இவர்கள் தயாரிக்கும் சர்கியூட் போர்டுகள் பல்வேறு தொழிற்சாலைகள், ஆட்டோமோட்டிவ், விண்வெளி, மருத்துவம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. 1988 ஆம் ஆண்டு குன்ஹிகண்ணன் இந்த கெய்ன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார்.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கும் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் நிறுவனமாகவே கெய்ன்ஸ் தொடங்கப்பட்டது. 1996ஆம் ஆண்டு ரமேஷும் அவருடைய மனைவி சவீதாவும் இணைந்து பெரிய அளவில் உருவாக்கிவிட்டனர். கெய்ன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் வரும் 2024 ஆம் ஆண்டில் 208 மில்லியன் டாலர் ஆண்டு வருமானத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications