சென்னபட்டணா தொகுதி இடைத்தேர்தல்: பாஜகவுக்கு குட்பை சொல்லும் யோகேஷ்வர்.. காங்கிரஸ் சார்பில் போட்டி?
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் சென்னபட்டணா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தர மறுக்கப்பட்டதால் பாஜகவின் யோகேஷ்வர் தமது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியில் இணைந்து சென்னபட்டணா தொகுதி வேட்பாளராக யோகேஷ்வர் போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னபட்டணா தொகுதியை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு பாஜக ஒதுக்கியதால் யோகேஷ்வர் எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியை விட்டு விலக முடிவு செய்துள்ளார்.
கர்நாடகாவின் சென்னபட்டணா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் முன்னாள் முதல்வர் குமாரசாமி. லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்று மத்திய அமைச்சரான குமாரசாமி, சென்னபட்டணா எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து சென்னபட்டணா சட்டசபை தொகுதிக்கு நவம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் தற்போது வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.

சென்னபட்டணா தொகுதியை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு பாஜக ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் சென்னபட்டணா தொகுதியில் தாம் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என பாஜக எம்.எல்.சி. யோகேஷ்வர் முட்டி மோதிப் பார்த்தார். ஆனாலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்குதான் சென்னபட்டணா தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் கடும் அதிருப்தி அடைந்தார் யோகேஷ்வர்.
இதனையடுத்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சின்னத்தில் யோகேஷ்வர் போட்டியிட வாய்ப்பு தருவோம் என அக்கட்சித் தலைவரான மத்திய அமைச்சர் குமாரசாமி தெரிவித்திருந்தார். ஆனால் இதனை பாஜக மூத்த தலைவரான முன்னாள் முதல்வர் எடியூரப்பா நிராகரித்திருந்தார்.
இந்த நிலையில் யோகேஷ்வர் தமது எம்.எல்.சி. பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். மேலும் பாஜகவை விட்டு விலகி காங்கிரஸில் இணைய இருக்கிறார் யோகேஷ்வர். சென்னப்பட்டணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக யோகேஷ்வர் போட்டியிடக் கூடும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications