கர்நாடகாவில் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த குமார் மீது மோசடி வழக்குப்பதிவு
பெங்களூர்: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காந்தி நகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின் வாபஸ் பெறப்பட்ட குமார் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடாகவில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியாகி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் பாஜக , எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே, கர்நடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

புலிகேசி நகரில் வேட்பாளராக அன்பரசனும் அறிவிக்கப்பட்டு இருந்தார். தேர்தல் ஆணையத்திலும் இரட்டை இலை சின்னம் கேட்ட எடப்பாடிபழனிசாமிக்கு, அவரை பொதுச்செயலாளராக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் பச்சைக்கொடி காட்டியது. அதேபோல் ஓ பன்னீர்செல்வமும் தனது தரப்பில் மூன்று இடங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்தினார். காந்திநகர், புலிகேசி நகர், கோலார் தங்க வயல் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களை ஓபிஎஸ் தரப்பு நிறுத்தியது.
இதில் புலிகேசி நகர் தொகுதியில் வேட்பு மனுநிராகரிக்கப்பட்டது. அதேவேளையில், காந்தி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக குமார் முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தார். இதற்கு எடப்படி பழனிசாமி தரப்பு கடும் தெரிவித்தது. கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இவ்விவகாரத்தை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியதோடு வேறு யாருக்கும் இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டு இருந்தார்.
இதையடுத்து, ஒபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். எனினும், அதிமுக ஏ, பி பார்ம்களை முறைகேடாக பயன்படுத்தியிருப்பதாகவும் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்படி பழனிசாமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரையடுத்து, ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த குமார் மீது பெங்களூரு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல் அளித்ததாக பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 1860 உட்பிரிவு 171 ஜீ -ன் கீழ் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக அதிமுக சார்பில் புலிகேசி நகரில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்த அன்பரசனையும் வாபஸ் பெறுவதாக அக்கட்சி தலைமை அறிவித்தது. பாஜக மேலிட தலைவர்கள் கேட்டுக்கொண்டதால் வாபஸ் பெறப்படுவதாக அதிமுக அறிவித்தது. அதேபோல், ஓ பன்னீர் செல்வம் தரப்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களும் வாபஸ் பெற்று இருந்தனர்.
-
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications