நிர்வாண நடனம் + ஓரினச்சேர்க்கை.. ஹாஸ்டலில் கதறிய 10ம் வகுப்பு மாணவன்.. 6 மாணவர்களின் வக்கிரம் - ஷாக்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் ஹாஸ்டலில் தங்கி தனியார் பள்ளியில் படித்து வரும் 10ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. சக மாணவர்கள் மற்றும் சீனியர் மாணவர்கள் இரவில் அந்த மாணவனை ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியதோடு, ஆடைகளின்றி நிர்வாணமாக நடனமாட வைத்து தொல்லை கொடுத்த சம்பவம் அதிர வைத்துள்ளது. இதுபற்றி புகார் செய்தும் வார்டன் நடவடிக்கை எடுக்காததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளவர். 6 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. வடகர்நாடகா மாவட்டத்தை சேர்ந்த மாணவன் பள்ளியின் விடுதியில் தங்கி 10ம் வகுப்பு படித்து வருகிறான்.

class-10-student-unnatural-sexually-assault-and-stripped-and-forced-to-dance-by-senior-students-in-b

இந்நிலையில் தான் 10ம் வகுப்பு மாணவனுக்கு 6 மாணவர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளர். 12ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள், 11ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர், 10ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் என்று மொத்தம் 6 மாணவர்கள் தொல்லை கொடுத்துள்ளனர்.

இவர்கள் 6 பேரும் இரவில் அந்த மாணவனின் அறைக்கு சென்று ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி மாணவனை நிர்வாணப்படுத்தி நடனமாட வைத்துள்ளனர். கடந்த 3ம் தேதி இரவு மாணவனை நிர்வாணப்படுத்தி நடமாட வைத்துள்ளனர். நடனமாடுவதை நிறுத்தியபோது மாணவனை அவர்கள் தாக்கி உள்ளனர். அதன்பிறகு கடந்த 4ம் தேதியும் நிர்வாணமாக நடமாட வைத்துள்ளனர். நடனமாடுவதை நிறுத்தியபோது ஒவ்வொரு மாணவரும் சென்று அந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

அதேபோல் கடந்த 5, 6ம் தேதிகளிலும் இப்படி தொல்லை கொடுத்துள்ளனர். வெந்நீரை உடலில் ஊற்றி துன்புறுத்தி உள்ளனர். இதனால் நொந்துபோன மாணவர் சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி வார்டன் மற்றும் முதல்வரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதவிர புகார் கூறியதால் வார்டன், பாதிக்கப்பட்ட மாணவனை திட்டி அவமானப்படுத்தி தாக்கி உள்ளார். இதையடுத்து சம்பவம் குறித்து மாணவனின் தந்தை பன்னரகட்டா போலீசில் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து பன்னரகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 6 மாணவர்கள் மற்றும் விடுதி வார்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விடுதியின் வார்டனை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.

அதேபோல் பள்ளியின் முதல்வர் மீதும் சில சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதனால் விசாரணைக்கு வரும்படி பள்ளி முதல்வருக்கும் சம்மன் அனுப்பப்பட உள்ளது. அதேபோல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள 6 மாணவர்களும் பள்ளி விடுதி அறையிலேயே இருக்க வேண்டும். போலீஸ் அனுமதியின்றி எங்கும் செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி போலீஸ் அதிகாரி கூறுகையில், ‛‛6 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பாதிக்கப்பட்ட மாணவனுடன் இயற்கைக்கு மாறான உறவு வைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+