Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு பஸ்சில் அசந்து தூங்கிய இளம்பெண்.. கண்ட இடத்தில் கை வைத்த கண்டக்டர்.. பயணி செய்த காரியம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: அரசு பேருந்தில் தூங்கிக்கொண்டு பயணம் செய்த இளம்பெண்ணின் உடலில் தொடக்கூடாத இடத்தில் தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்ட கண்டக்டரை போலீசார் கைது செய்துள்ளனர். பஸ் முழுவதும் பயணிகள் இருக்கும் போது, நைசாக கண்டக்டர் இளம்பெண்ணின் உடலில் கை வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை கைது செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் பாலியல் சீண்டல், வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சிறுமிகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் கொடூர சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இத்தகைய செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்பட்டாலும் இது போன்று கொடூர சம்பவங்கள் அரங்கேறுகிறது.

conductor-misbehaved-with-female-passenger-in-a-karnataka-government-bus-in-mangalore

தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் சில்மிஷம்

தனியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளுக்கோ, வேலை முடிந்து வீட்டுக்கு வரும் பெண்களையோ குறி வைத்து ஒரு சில கோடூரர்கள் படுபாதக செயல்களை செய்து வருகிறார்கள். ஆனால் சில நேரங்களில் பஸ்களில் வரும் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசு ஊழியர்களே இது போன்ற செயல்களை செய்வது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

அப்படித்தான் பெங்களூரில் ஓடும் அரசு பஸ்சில் தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணின் உடலில் கண்ட இடத்தில் தொட்டு கண்டக்டரே பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், இத்தகைய படுபாதக செயலை செய்த கண்டக்டரை கைது செய்ய வேண்டும் எனவும், பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய இவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது மன்னிக்க முடியாதது எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கண்ட இடத்தில் தொட்டு சில்மிஷம்

கர்நாடக மாநிலம் மங்களூரில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தின் விவரம் வருமாறு:- கர்நாடக மாநில அரசு பேருந்து ஒன்று மங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் இளம்பெண்கள், முதியவர்கள் என பஸ் சீட் நிறைந்த அளவுக்கு பயணிகள் பயணித்துள்ளனர். பேருந்து சென்று கொண்டிருந்ததால் ஒரு சில பயணிகள் தூங்கிக் கொண்டு இருந்தனர்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொடூர மனம் கொண்ட பேருந்து நடத்துநர், அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த இளம்பெண் ஒருவரிடம் கண்ட இடத்தில் கை வைத்து சில்மிஷம் செய்ய முயன்றுள்ளார். இதைப்பார்த்த சக பயணி, கண்டக்டரின் இந்த அத்துமீறிய செயலை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். ஒரு நிமிடம் ஓடும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டார்

பேருந்தில் பயணிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய கண்டக்டரே இப்படி நடந்து கொள்ளலாமா? இவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று பதிவிட்டு வந்தனர். இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கும் சென்ற நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிஎன்.எஸ் சட்டம் 74 மற்றும் 75 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக மங்களூர் நகர கமிஷனர் அனுபம் அகர்வால் கூறினார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடப்பதாகவும் கூறியுள்ளார். கர்நாடக அரசு போக்குவரத்து கழக மங்களூர் டிவிஷன் அதிகாரி ராஜேஷ் ஷெட்டி, இந்த சம்பவம் பற்றி கூறுகையில், "இந்த வீடியோ பரவிய 15 நிமிடத்தில் கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடும் நடவடிக்கை அவர் மீது எடுக்கப்படும். தொடர்ந்து விசாரணை நடக்கிறது" என்றார்.

நெட்டிசன்கள் கோரிக்கை

இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வரும் காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில், ஒரு காதல் ஜோடி, முகம் சுழிக்க வைக்கும் விதமாக நடந்து கொண்ட காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+