மிஸ்டர் பசவராஜ்! பிட்காயின் விவகாரத்தால் சி.எம். பதவிக்கு வேட்டு- காங். பிரியங்க் கார்கே வார்னிங்
பெங்களூர்: பிட்காயின் மோசடி விவகாரத்தில் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை பதவி இழக்க நேரிடும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடியை கொடுத்திருக்கிறது பிட்காயின் விவகாரம். கர்நாடகாவில் கடந்த வாரம் ஹேக்கர் ஶ்ரீகி என்ற ஶ்ரீகிருஷ்ணா அண்மையி0ல் கைது செய்யப்பட்டார். அரசு இணைய பக்கங்களை ஹேக் செய்தது, டார்க் வெப் மூலமாக போதைப் பொருள் விற்பனை, இதற்காக கிரிப்டோ கரன்சியில் பணம் பெறுவது ஆகியவை ஶ்ரீகி மீதான குற்றச்சாட்டுகள்.

பிட்காயின் விவகாரம்
இந்த பிட்காயின் விவகாரம் இப்போது அரசியல் சூறாவளியாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கே கூறியதாவது: பிட்காயின் விவகாரத்தை கர்நாடகா பாஜக அரசு எளிமையாக மூடி மறைத்துவிட முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

3-வது முதல்வர் வருவார்
பாஜகவின் மூத்த தலைவர்கள், பாஜக மூத்த தலைவர்களின் வாரிசுகள், அரசு அதிகாரிகள் ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர். இது பல கோடி ரூபாய் மோசடி தொடர்புடையது. பிட்காயினை பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிட்காயின் மோசடிகளால் முதல்வர் பசவராஜ் பொம்மை பதவியை இழக்கவும் நேரிடலாம். இதற்கு முன்னர் பாஜக ஆட்சியில் 3 முதல்வர்கள் இருந்திருக்கிறார்கள். தற்போதும் அதேபோல பாஜக ஆட்சியில் 3-வது முதல்வர் ஒருவர் வரத்தான் போகிறார்.

விசாரிக்க என்னங்க தயக்கம்?
பிட்காயின் விவகாரத்தை விசாரிப்பதில் ஏன் இவ்வளவு தாமதம்? எதற்காக முதல்வர் பசவராஜ் பொம்மை தாமதம் செய்கிறார்? உள்துறை அமைச்சர் ஏன் விசாரணையை தாமதம் செய்கிறாரா? இவ்வாறு பிரியங்க கார்கே கூறினார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முதல்வர் பசவராஜ் பொம்மை, பிட்காயின் மோசடியில் காங்கிரஸ் தலைவர்கள் பெயரும்தான் அடிபடுகிறது. யார் யாருக்கு இதில் தொடர்பு உள்ளது என தெரிவித்தால் நாங்களும் விசாரணை நடத்த தயாராகவே இருக்கிறோம் என்றார்.

யாருக்கு எல்லாம் தொடர்புன்னு சொல்லுவோம்
முதல்வர் பசவராஜ் பொம்மையின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, பிட்காயின் மோசடி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பிருக்கிறது எனில் தாராளமாக கைது செய்யலாம்.. அரசாங்கத்தை நீங்கள்தானே நடத்துகிறீர்கள்? உங்களிடம்தானே போலீஸ் இருக்கிறது? நீங்கள்தானே விசாரணை நடத்தும் அதிகாரத்தை வைத்துள்ளீர்கள்? முதல்வர் பசவராஜ் பொம்மையின் விளக்கத்தை பார்த்தால் சந்தேகம் மேலும் மேலும் அதிகரித்தான் செய்கிறேன். பிட்காயின் மோசடி விவகாரத்தில் பாஜக தலைவர்கள் யாருக்கு எல்லாம் தொடர்பு என்பதை உரிய நேரத்தில் அம்பலப்படுத்துவோம் என்றார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம்












Click it and Unblock the Notifications