கர்நாடகாவில் உதித்த "சீர்திருத்தவாதி.." Mr கிளீன் இமேஜ்.. சித்தராமையா தேர்வு ஏன் ரொம்பவே முக்கியம்
பெங்களூர்: கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையா நாளை பதவியேற்கிறார். கர்நாடகாவில் முழுமையாக 5 ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருந்து, தேர்தலில் தோல்வியடைந்து, மீண்டும் முதல்வராகப் பதவியேற்ற முதல் முதல்வர் சித்தராமையா ஆவார். அவர் குறித்த சில சுவாரசிய தகவல்களைப் பார்க்கலாம்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கர்நாடக காங்கிரஸின் பிரசாரத்தில் எந்தவொரு தெளிவும் இல்லாமலே இருந்தது. அப்போது சித்தராமையா தனது 75வது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய கர்நாடகாவில் உள்ள தாவன்கெரேயில் மாநாடு போன்ற கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். ராகுல் காந்தி கூட, இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நகரமெங்கும் மக்கள் கூட்டம் அலைமோதியதால், ராகுல் காந்தியே அங்குச் செல்ல சில மணி நேரம் வரை ஆனது.
மொபைல் கூட இல்லை: சித்தராமையா இந்தக் கூட்டம் மூலம் தனது பலத்தைக் காட்டினார். இது அவர் யார் என்பதைக் கட்சித் தலைமைக்கு நினைவூட்டியது.. கட்சி மட்டுமின்றி, மக்களிடமும் செல்வாக்கு பெற்ற மக்கள் தலைவராகவே சித்தராமையா இருந்தார். சித்தராமையா இதுநாள் வரை தனக்கென தனியாக மொபைலை வைத்துக் கொள்வது இல்லை. காங்கிரஸ் தலைமை தொடங்கி முக்கியத் தலைவர்கள் யாராக இருந்தாலும் தனிப்பட்ட உதவியாளர் மூலமே சித்தராமையாவை தொடர்பு கொள்ள முடியும்.
பெண்கள், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை, ஏழைகளுக்கு 10 கிலோ இலவச அரிசி என்ற காங்கிரஸ் பல வாக்குறுதிகளை அளித்திருந்தது. இதை எல்லாம் காங்கிரஸ் செய்யும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு அளித்தவர் சித்தராமையா. இதன் மூலம் காங்கிரஸ் 136 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது.
முதல் தலைவர்: கர்நாடகாவில் கடந்த 40 ஆண்டுகளில் எந்தவொரு முதல்வரும் முழுமையாக 5 ஆண்டுகள் முதல்வர் பதவியில் இல்லாத நிலையில், அதை மாற்றி 2013 முதல்வர் 2018 வரை முதல்வர் பதவியில் இருந்து காட்டியவர் சித்தராமையா. கர்நாடகாவில் முழுமையாக 5 ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருந்து, தேர்தலில் தோல்வியடைந்து, மீண்டும் முதல்வராகப் பதவியேற்ற முதல் முதல்வர் சித்தராமையா ஆவார்.
கர்நாடகாவில் மூன்றாவது பெரிய சமூகமான குருபா சமூகத்தைச் சேர்ந்தவர் சித்தராமையா. மேலும் அவருக்கு அஹிந்தா எனப்படும் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளின் ஆதரவும் இருக்கிறது. இதுவும் தேர்தலில் மிக பெரியளவில் கை கொடுத்தது.
முதல்வராக அவரை நியமித்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு பூஸ்டை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஓபிசி பிரிவினரைத் தனது பக்கம் ஈர்க்க பாஜக திட்டமிட்டிருந்த நிலையில், அதை முறியடிக்கும் விதமாக சித்தராமையா முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சித்தராமையாவின் செல்வாக்கு: கிராமப்புற மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவராக சித்தராமையா இருக்கிறார். மேலும், கிராமப்புற மற்றும் விவசாயப் பிரச்சினைகளில் தயக்கமில்லாமல் குரல் கொடுப்பவராக அறியப்படுகிறார். மக்களிடையே செல்வாக்கு மிக்க தலைவராக அறியப்படும் சித்தராமையா கட்சிகளைத் தாண்டியும் மதிக்கப்படுகிறார். மேலும், சித்தராமையாவை தான் முதல்வராக நியமிக்க வேண்டும் என்பதில் ராகுல் காந்தியும் தெளிவாக இருந்துள்ளார்.
தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு, பாஜக தலைவர்கள் அவரை "சித்தராமுல்லா கான்" என்று விமர்சிக்கத் தொடங்கினர். மற்ற தலைவர்கள் என்றால் இதைச் சமாளிக்கவே பார்த்து இருப்பார்கள். ஆனால், சித்தராமையா யாரும் தராத ஒரு பதிலைத் தந்தார்.
நறுக் பதிலடி: அவர் கூறுகையில், "சித்தராமுல்லா என்று அழைக்கப்படுவதில் எனக்கு மகிழ்ச்சி தான். முஸ்லிம்களுக்கு நான் செய்த செயல்களுக்கான அங்கீகாரமா இதைப் பார்க்கிறேன். அவர்கள் என்னை சித்தரமுல்லா கான் என்று அழைக்கிறார்கள் என்றால் அந்த சமூகம் என் பணிக்காக என்னை நேசிக்கிறது என்றே அர்த்தம். அதேநேரம் நான் இந்து வகுப்புவாதத்தைப் போலவே இஸ்லாமிய வகுப்புவாதத்தையும் எதிர்க்கிறேன்" என்று நறுக்கெனப் பதிலளித்தார்.
சித்தராமையாவின் அனைத்து திட்டங்களும் எப்போது ஏழை மக்களைக் குறிவைத்தே இருக்கும். மேலும், கர்நாடக மாநிலத்திற்குத் தனிக்கொடி வேண்டும் என்றும் வாதிட்டவர் அவர்.. மேலும், நகரில் இந்தியில் உள்ள அறிவிப்புப் பலகைகளை அகற்றிவிட்டு, கன்னட மொழியில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டவரும் அவர்தான்.
நம்பிக்கை தருகிறார்: பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கருத்தியலை முறியடிக்கப் பிராந்திய அடையாளத்துடன் கூடிய தலைவர்களை முன்னிறுத்தக் காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகளுக்கு சித்தராமையா நம்பிக்கை அளிக்கிறார். இப்படி சித்தராமையாவுக்கு பாசிட்டிவாக பல இருக்கிறது. அதேநேரம் அவர் எதிர்கொள்ளும் சவால்களும் இருக்கவே செய்கிறது.
காங்கிரஸ் அதன் தேர்தல் வார்த்தைகளில் பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளது. அதை அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு சித்தராமையாவுக்கு இருக்கிறது. இது தவிரக் காங்கிரஸுக்கு அதிகம் வாக்களித்த கிராமப்புற மக்களின் நலனுக்கான திட்டங்களைச் செய்ய வேண்டும். மேலும், தொழில்துறை வளர்ச்சி, நகரமயமாக்கலுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கூறுகையில், "அவர் தனக்கான அரசியலை மட்டுமே செய்வார். பெரிய சர்வதேச சிஇஓக்களை காட்டிலும் ஏழை விவசாயிகளைச் சந்திப்பதில் முன்னுரிமை அளிப்பார். மக்கள் நலனை அவர் கட்சிக்கு மேலானதாக நினைப்பார்" என்றார்.
ஆர்எஸ்எஸ்: அதேபோல ராகுல் காந்தியைப் போலவே சித்தராமையாவும் பாஜக- ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சித்தாந்த ரீதியாகத் தொடர்ச்சியாகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்த காலங்களிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பை நேரடியாகவும் அவர் விமர்சிக்கத் தயங்கியது இல்லை. இது மட்டுமின்றி அவர் மீது எந்தவொரு பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை. Mr. Clean என்ற இமேஜையே கொண்டிருக்கிறார்.
அதேபோல மற்றொரு காங்கிரஸ் நிர்வாகி, சித்தராமையாவை தமிழகத்தில் பெரியார் எப்படி ஒரு சமூக சீர்திருத்தவாதியோ அதேபோல ஒரு கர்நாடகாவில் இருக்கும் தலைவர் என ஒப்பிடுகிறார். சமூகக் கட்டமைப்புகளை ஜனநாயகம் மூலம் சரி செய்ய முடியும் என்று நம்பியவர் அவர். இதன் காரணமாகவே ஆர்.எஸ்.எஸ் மக்களிடையே பிரிவை ஏற்படுத்துவதாகக் கருதி அவர் கடுமையாக விமர்சிக்கிறார். மேலும், அவருக்கு எந்தவொரு சடங்கிலும் நம்பிக்கை இல்லையாம்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications