கலவரம் வெடிக்குமா? காங்கிரஸ் பற்றி பொய் பிரச்சாரம்.. அமித்ஷா பேச்சுக்கு எதிராக போலீசில் பரபர புகார்!
பெங்களூர் : கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரங்கள் வெடிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி போலீசில் புகார் அளித்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கும் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மே 13ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

கர்நாடகத்தில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள டெர்டால் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.
காங்கிரஸ் வந்தால் கலவரம் நடக்கும் : அப்போது பேசிய அமித் ஷா, "வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் கர்நாடகா மாநிலத்தின் வளர்ச்சி ரிவர்ஸ் கியரில் செல்லும். மாநிலத்தில் கலவரங்கள் நிகழும். எனவே அரசியல் ஸ்திரத்தன்மை தரும் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். புதிய கர்நாடகம் வேண்டுமென்றால் மக்கள் பாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்." என்றார்.

அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. காங்கிரஸ் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், "இது ஒரு வெட்கக்கேடான மிரட்டல் பேச்சு. இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரால் தடைசெய்யப்பட்ட அமைப்பான ஆர்எஸ்எஸ்-க்கு விசுவாசமாக இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர், இப்போது மிரட்டல் விடுக்கிறார்.
பாஜகவுக்கு தோல்வி தொடங்கிவிட்டது என்பதாலேயே தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா இவ்வாறு பேசி உள்ளார். இது அமித் ஷாவின் Insult, Inflame, Incite and Intimidate எனும் 4I உத்தியையே காட்டுகிறது. இது அமித் ஷாவுக்கு அவமானம். இந்த விவகாரத்தை நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு கொண்டு செல்வோம்" என்று தெரிவித்தார்.
போலீஸில் காங்கிரஸ் புகார் : இந்நிலையில், தேர்தல் பரப்புரை கூட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மீது வழக்குப்பதிவு செய்யகோரி காங்கிரஸ் தலைவர்கள் டிகே.சிவக்குமார், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் பெங்களூரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் பாஜகவினர் கர்நாடகாவில் சாதி, மத மோதலைத் தூண்டும் விதமாக பேசி மாநிலத்தின் அமைதியைக் குலைக்கின்றனர் என்றும் பாஜகவினர் எதிர்க்கட்சிகளை இழிவுபடுத்துவதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி, போலீசில் புகார் அளித்துள்ளது.
"கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரம் ஏற்படும் என்றும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடையை நீக்குவதாக காங்கிரஸ் உறுதியளித்துள்ளதாகவும் அமித் ஷா கூறினார். இந்த இரண்டு கூற்றுகளும் காங்கிரஸ் கட்சி பற்றி பொய்யான பிரச்சாரத்தைப் பரப்பி வெறுப்பை ஏற்படுத்துகிறது" என்று ரந்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை











Click it and Unblock the Notifications