சீக்ரெட்டை வெளியே சொல்லாதீங்க! சட்டென ராகுல் காந்தி போட்ட ஆர்டர்! தடதடத்த கர்நாடக காங்.. என்னாச்சு?
பெங்களூரு: கர்நாடகா காங்கிரஸின் உட்கட்சி விவகாரங்களை பொது வெளியில் பேசக் கூடாது என்று ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
கர்நாடக சட்டசபைத் தேர்தல் 2023-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 150 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதனால் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே உள்ளதால் இப்போதே களப்பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது.

காங்கிரஸ் தீவிரம்
அந்த வகையில் கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ் சார்பில் நிறுவப்படவுள்ள வார் ரூம் இன் சார்ஜ் ஆக தமிழகத்தை சேர்ந்த சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக ஆலோசகராக சுனில் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது.

ராகுல் பயணம்
இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக கர்நாடகா சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து கர்நாடகா காங்கிரஸ்-ன் அரசியல் விவகாரக் குழு கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேர்தல் தொடர்பாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உட்கட்சி விவகாரங்கள் குறித்து பொதுவெளியிலும், தொலைக்காட்சிகளிலும் யாரும் பேசக் கூடாது என்று வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளது.

ராகுல் அறிவுறுத்தல்
அதேபோல் பாஜக அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் கூடுதல் ஆக்ரோஷத்துடன் விமர்சிக்கவும், காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு ஆட்சியமைக்க செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு பின் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் கூறுகையில், அண்மையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உட்கட்சி விவகாரங்களில் சில இடங்களில் பேசியுள்ளனர். இனி அதுபோன்ற பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாமல் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

உட்கட்சி விவகாரம்
கர்நாடகா காங்கிரஸில் தலைவர்களுக்கு இடையே எந்தக் கருத்து வேறுபாடுகளும் இல்லை. சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னரே, முதல்வர் யார் என்று கட்சி மேலிடம் முடிவு செய்யும். வேட்பாளர் பட்டியலுக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் தேதி அறிவித்தப்பின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம் -
"ஐ லவ் யூ.." அத்துமீறிய பேராசிரியருக்கு செருப்படி.. கர்நாடகாவில் தக்க பாடம் புகட்டிய கல்லூரி மாணவி -
"மாதம் ரூ.90,000.." வாயை பிளக்க வைக்கும் பானி பூரி வியாபாரியின் வருவாய்.. விவாதமான வீடியோ












Click it and Unblock the Notifications