சுரங்க முறைகேடு.. குமாரசாமியை விசாரிக்க வேண்டும்! கர்நாடக ஆளுநர் மாளிகை நோக்கி காங்கிரஸ் பேரணி
பெங்களூர்: சட்டவிரோதமாக சுரங்க உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக, மத்திய அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி இன்று ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியை நடத்தியுள்ளது. இதில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர் என பலர் பங்கேற்றனர்.
கர்நாடக மாநிலத்தில் சமீப காலமாக அரசியல் சலசலப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் வால்மீகி வாரிய நிதி முறைகேடுகளால் அமைச்சர் நாகேந்திரா பதவி இழந்திருந்தார். இப்போது 'மூடா' முறைகேடு வழக்கு கர்நாடக காங்கிரஸ் ஆட்சியை குடைய தொடங்கியுள்ளது.

அதாவது மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் மூலம், சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தன்னுடைய மனைவிக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததற்கு இழப்பீடாகவே இந்த மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன, என்று சித்தராமையா விளக்கமளித்துள்ளார்.
இந்த விளக்கத்தை ஏற்காத பாஜக, 'மூடா' குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக தொடர்ந்து அம்மாநில ஆளுநரிடம் வலியுறுத்தி வந்தது. மேலும் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி மைசூர் நோக்கி பேரணியை நடத்தியது. இதனையடுத்து இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதியளித்தார்.
இப்படி இருக்கையில், சட்டவிரோதமாக சுரங்க உரிமை அளித்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி மீதும், வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
அதாவது, கடந்த 2007ம் ஆண்டு முதல்வராக இருந்த போது, சட்ட விதிகளுக்கு மாறாக ஸ்ரீசாய் வெங்கடேஸ்வரா மினரல்ஸ் நிறுவனத்திற்கு சுரங்க உரிமம் வழங்கியது தொடர்பான விவகாரத்தில், குமாரசாமிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு 2023ல் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு லோக் ஆயுக்தாவின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) கடிதம் எழுதியிருந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 19ம் தேதியும் கடிதம் எழுதப்பட்டிருந்தது.
எனவே குமாரசாமி மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று ஆளுநர் மாளிகை நோக்கி காங்கிரஸ் பேரணியை நடத்தியுள்ளது. இதில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர். இந்த பேரணியின் இறுதியில், ஆளுநரிடம் காங்கிரஸ் சார்பில் மனு கொடுக்கப்படும். இந்த பேரணியில் முதல்வர் சித்தராமையா பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பங்கேற்கவில்லை.
-
நாங்க உங்க கூட இல்ல ப்ரோ.. செல்வப் பெருந்தகையை கழற்றி விடும் காங்? மாணிக்கத்துக்கு வந்த திடீர் மவுசு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications