நாளை கர்நாடகா தேர்தல்.. இன்று பாஜகவுக்கு “செக்” - “பல உயிர்கள் போச்சே” - ஒப்பந்ததாரர் சங்கம் பரபர
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் நாளை சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் ஊழல் தலைவிரித்து ஆடுவதாகவும் 40 சதவீத கமிஷனால் பல ஒப்பந்ததாரர்கள் உயிரிழந்து உள்ளதாகவும் கர்நாடகா மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கம் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றாலும், அடுத்த நாளே அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஆட்சி கலைந்தது.

அதை தொடர்ந்து காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி கர்நாடகாவில் முதலமைச்சராக பதவியேற்றார். சில ஆண்டுகளிலேயே காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவிச்செல்ல குமாரசாமி ஆட்சியும் கலைந்து மீண்டும் எடியூரப்பா தலைமையிலான பாஜக கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தது.
அடுத்த சில மாதங்களில் எடியூரப்பாவுக்கு எதிராக கர்நாடக பாஜகவினர் போர்க்கொடி தூக்கிய நிலையில், அவரும் முதலமைச்சர் பதவியை துறந்து பசவராஜ் பொம்மை அம்மாநில முதலமைச்சராக பதவியேற்றார். பசவராஜ் பொம்மை முதலமைச்சரானதில் இருந்தே கர்நாடகாவில் தொடர்ந்து அமைதியற்ற சூழல் நிலவி வருவதாக புகார்கள் உள்ளன.
ஹிஜாப், ஹலால் விவகாரம், அதனால் ஏற்பட்ட மதவாத மோதல்கள், உள்கட்சிப் பூசல்கள் போன்றவை கர்நாடகாவின் அமைதியை குலைத்தன. இப்படி 5 ஆண்டுகளில் 4 முறை முதலமைச்சர்கள் மாறிய கர்நாடகாவில் பாஜக ஆட்சிகாலம் இம்மாத இறுதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றன. இதில் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் பாஜகவும், இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சியில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டன.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கர்நாடகாவில் அனல் பறந்துகொண்டு இருந்த தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தன. அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு இருக்கின்றன. அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரச்சாரங்களை முடிந்து இருக்கும் நிலையில்தான் கர்நாடகா மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த அறிக்கையில், "கர்நாடகா சட்டசபைக்கு வரும் மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. நமது நேசத்திற்கு உரிய மாநிலத்தில் ஊழல் என்பது பயமுறுத்தும் அளவுக்கு அதிகரித்துவிட்டது. அரசு திட்டங்களுக்கு பெறப்படும் 40 சதவீதம் கமிஷன் ஏற்கனவே பல ஒப்பந்ததாரர்களின் உயிர்களை பறித்து உள்ளது.
பொதுமக்களும் உயிருக்கு ஆபத்தான, குறைபாடுகளை கொண்ட உள்கட்டமைப்புகளுடன் வாழ கட்டாயப்படுத்தப்படுகின்றனர். தங்கள் மனசாட்சிக்கு ஏற்ப மக்கள் வாக்களிக்கும்போதுதான் ஜனநாயகம் செயல்படும். ஊழல் என்பது எங்கள் கூட்டு மனசாட்சியை ஆழமாக காயப்படுத்துகிறது." என்று தெரிவித்து உள்ளனர்.
-
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications