பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெங்களூரு சுடுகாட்டில் ஹவுஸ்ஃபுல் போர்டு... சடலங்களை நாய்கள் கவ்விச் செல்லும் அவல நிலை

பெங்களூருவில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருவதால் சுடுகாட்டில் சடலங்களை எரிக்க இடமில்லாமல் ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்டி வைத்துள்ளனர். சடலங்களை நாய்கள் இழுத்துச்செல்லும் நிலை உருவாகியுள்ளது.

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் சடலங்களை எரிக்கவும், புதைக்கவும் இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சுடுகாட்டில் ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்டும் அவல நிலை உருவாகியுள்ளது. பாதி எரிந்து கொண்டிருக்கும் சடலங்களை நாய்கள் கவ்வி இழுத்துச்சென்று தெருவில் போட்டு கடித்து குதறி வருகின்றன.

கர்நாடகாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக வீசி வருகிறது. புதிதாக 37,733 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 217 பேர் உயிரிழந்துள்ளனர்.

Covid 19: Houseful board in Bangalore crematorium the tragedy of dogs snatching corpses

தலைநகர் பெங்கரூவில் 21,199 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 64 பேர் மரணமடைந்துள்ளனர். ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் காம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவமனையில் சில மணிநேரங்களில் 24 நோயாளிகள் மரணமடைந்தனர்.

தினசரி மரணங்கள் அதிகரித்து வருவதால் சுடுகாடுகளில் புதைக்கவும் எரிக்கவும் இடமில்லாமல் மணிக்கணக்கில் ஆம்புலன்சில் சடலங்கள் காத்திருக்கின்றன. கொரோனா மரணங்களை எதிர்கொள்ள பெங்களூருவில் புதிதாக சுடுகாடுகளை ஏற்படுத்தினாலும் போதவில்லை. பத்து மணிநேரத்திற்கும் மேலாக உடலை தகனம் செய்து காரியம் செய்ய காத்திருக்க வேண்டியுள்ளது.

கிடனஹல்லி சுடுகாட்டுக்கு உடலை கொண்டு வந்த ஒருவர் அனைத்து இடுகாடுகளுக்கும் சென்று வந்துள்ளார் அங்கு எல்லாம் ஹவுஸ் ஃபுல் போர்ட்டு மாட்டி வைத்துள்ளனர். இடமில்லை என்று திருப்பி அனுப்பிவிட்டதாகக் கூறுகின்றனர்.

சில இடுகாடுகளில் வரிசையாக 10 ஆம்புலன்ஸ்களில் உடல்களுடன் நிற்கின்றன. எரிபொருள்கள் பற்றாக்குறை வறட்டி, விறகுகள் பற்றாக்குறையினால் உடல்களை முழுதும் எரிக்க முடியவில்லை.

எக்ஸிட் போல் சொன்னது என்ன.. தமிழக தேர்தல் ரிசல்ட் என்ன? சரியாக கணித்தது யார்.. இதோ பாருங்கஎக்ஸிட் போல் சொன்னது என்ன.. தமிழக தேர்தல் ரிசல்ட் என்ன? சரியாக கணித்தது யார்.. இதோ பாருங்க

பெங்களூரு தாவனகெரே இடுகாட்டில் காணும் காட்சிகள் பலரது மனதை உலுக்கி வருகின்றன. குடும்ப உறுப்பினர் இருக்கும் வரை சுடுகாட்டு வெட்டியான் பொறுப்பாக வேலை செய்கிறார்.உறவினர்கள் நகர்ந்த பிறகு பாதி உடல்கள் எரிந்தும் எரியாத உடல்களின் உறுப்புகளை நாய்கள் கவ்வி இழுத்துச்சென்று கடித்துக்குதறி தெருவில் வீசி விடுகின்றன.

காலையில் எழுந்து பார்ப்பவர்கள் மனதெல்லாம் பதைபதைக்கிறது. வீடுகளுக்கு முன்னால் பாதி எரிந்த உடல்களின் உறுப்புகள் கிடக்கின்றன. இதனால் பலரும் அச்சத்துடன் காணப்படுகின்றனர். சடலங்கள் எங்கும் எரிந்து கொண்டே இருப்பதால் துர்நாற்றமும் வீசி வருகிறது. நகரமே சுடுகாடாக மாறி வருகிறது.

English summary
House full board is stuck with no place to burn corpses in crematorium as corona deaths are on the rise in Bangalore. The bodies have been dragged away by dogs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X