பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மன அழுத்தத்தை குறைக்க.. சமூக விலகலுடன் கொரோனா வார்டில் திடீர் குத்தாட்டம் போட்ட நோயாளிகள்

Google Oneindia Tamil News

பெங்களூரு: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதற்கான நோய் தடுப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மன அமைதிக்காக திடீரென ஆட்டம் பாட்டத்தில் (பிளாஷ் மாப்) ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகள், கோவிட் கேர்களில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இது போல் தனியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதால் குடும்பத்தினரை பிரிந்து இருப்பது அவர்களுக்கு ஒரு வித மன அழுத்தத்தை கொடுத்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் வேகமாக உயரும் கொரோனா.. 20 நாளில் 48 சதவீதம் உயர்வு.. ஒரே நாளில் 37 ஆயிரம் பேர் பாதிப்பு இந்தியாவில் வேகமாக உயரும் கொரோனா.. 20 நாளில் 48 சதவீதம் உயர்வு.. ஒரே நாளில் 37 ஆயிரம் பேர் பாதிப்பு

தற்கொலை

தற்கொலை

இதன் காரணமாக வைரஸால் பாதிக்கப்பட்ட சிலர் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சிப்பது, மையத்தில் இருந்து தப்பிப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். நோயாளிகளுக்கும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் ஏற்படும் மனஉளைச்சலை போக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேலை

வேலை

சில சமயங்களில் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகள் பாண்டி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி தாங்களே தங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறார்கள். கைத் தொழில்களை செய்வது, ஓவியம் வரைவது உள்ளிட்ட தங்களுக்கு பிடித்தமான வேலைகளையும் செய்து வருகிறார்கள்.

பல் மருத்துவமனை

பல் மருத்துவமனை

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள அரசு பல் மருத்துவமனை கொரோனா தடுப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் சிலர் குழுக்களாக பிரிந்து நேற்றைய தினம் மருத்துவமனை வளாகத்தில் ஆடல் பாடல் நடனத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

புத்துணர்ச்சி

புத்துணர்ச்சி

இந்த நடனத்தில் ஈடுபட்ட நோயாளிகள் அனைவரும் முகக் கவசம் அணிந்து கொண்டும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தப்படியும் உற்சாகமாக நடனம் ஆடினர். இதில் மருத்துவ குழுவினரும் இணைந்து கொண்டனர். இந்த நடனம் தனிமை எனும் எண்ணத்தை தூக்கி எறிந்துவிட்டு புத்துணர்ச்சியை கொடுப்பதாக கூறுகிறார்கள்.

Recommended Video

    Oxford தடுப்பூசிக்கு போட்டியாக china அறிவித்த coronavirus vaccine

    இந்தியாவில் வேகமாக உயரும் கொரோனா.. 20 நாளில் 48 சதவீதம் உயர்வு.. ஒரே நாளில் 37 ஆயிரம் பேர் பாதிப்பு

    English summary
    Covid 19 patients organise a flash mob in Karnataka with maintaining social distancing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X