அறிவியல், தொழில் ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநர் 'தமிழர்' கலைச்செல்விக்கு 2 ஆண்டு பணி நீட்டிப்பு
பெங்களூர்: நாட்டின் முக்கிய அறிவியல் ஆராய்ச்சி மையமான அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர் CSIR) தலைமை இயக்குநரான தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி கலைச்செல்வியின் பணிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 4,500 விஞ்ஞானிகள், 38 ஆராய்ச்சி மையங்களுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் இயக்குநர் என்ற பெருமைக்குரியவர் கலைச்செல்வி.
அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர் CSIR) தலைமை இயக்குநராக 2022-ம் ஆண்டு தமிழ்நாட்டின் மூத்த விஞ்ஞானி கலைச்செல்வி நியமிக்கப்பட்டார். நாட்டின் மிக முக்கியமான அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் தலைமை இயக்குநர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் இயக்குநர்- முதல் தமிழர் மூத்த விஞ்ஞானி கலைச்செல்வி.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. செயின்ட் ஜோசப் நடுநிலைப் பள்ளி, திருநெல்வேலி
காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வி கற்றார்.
சிஎஸ்ஐஆர் மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றிய கலைச்செல்வி, எலக்ட்ரோகெமிக்கல் மின்சார சாதனங்களில் 25 ஆண்டுகள் ஆய்வுப் பணி மேற்கொண்டவர். 125-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து 6 காப்புரிமைகளும் பெற்றவர்.
தமிழ் மீடியம்னா சும்மாவா! மத்திய ஆராய்ச்சி துறை தலைவரான தமிழர்! யார் இந்த "கலைச்செல்வி"? செம பின்னணி
காரைக்குடி சிஎஸ்ஐஆர் - மத்திய எலக்ட்ரோகெமிக்கல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக 2022-ல் கலைச்செல்வி பணியாற்றி வந்தார். அப்போது சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநராக இருந்த சேகர் மாண்டே ஓய்வு பெற்ற நிலையில் அப்பதவிக்கு தமிழரான கலைச்செல்வி நியமிக்கப்பட்டார். நாட்டின் 4,500 விஞ்ஞானிகள் மற்றும் 38 ஆராய்ச்சி மையங்களுக்கு தலைமை தாங்கும் முதல் பெண்- முதல் தமிழர் பெருமையைப் பெற்றவர் கலைச்செல்வி.
அப்போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலைச்செல்விக்கு வாழ்த்துத் தெரிவித்து இருந்தனர். முதல்வர் ஸ்டாலின் தமது வாழ்த்துச் செய்தியில் இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான சிஎஸ்ஐஆர்-ன் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற சிறப்பை தமிழகத்தைச் சேர்ந்தகலைச்செல்வி அடைந்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள். தமிழ் வழிக்கல்வி, அறிவியலை கற்றுணரத் தடையாகாது என்பதற்கு கலைச்செல்வியின் இந்த சாதனையே சிறந்த சான்று என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் சிஎஸ்ஐ ஆர் தலைமை இயக்குநரான கலைச்செல்வியின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications