சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழ் மீடியம்னா சும்மாவா! மத்திய ஆராய்ச்சி துறை தலைவரான தமிழர்! யார் இந்த "கலைச்செல்வி"? செம பின்னணி

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அறிவியல் மற்றும் நிர்வாக ஆராய்ச்சி துறை தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1942ல் ஆங்கிலேயே அரசால் தொடங்கப்பட்டுய பின்னர் மத்திய அரசு மூலம் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்திய அறிவியல் ஆராய்ச்சி அமைப்புதான் சிஎஸ்ஐஆர். இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆராய்ச்சி அமைப்பு என்றால் சிஎஸ்ஐஆர்தான்.

சிஎஸ்ஐஆர் கட்டுப்பாட்டில் மொத்தம் 38 லேப்கள், 39 சென்டர்கள், 3 இன்னோவேஷன் சென்டர்கள், 5 யூனிட்கள் உள்ளன. இந்தியா முழுக்க 14000 பேர் இதில் பணியாற்றுகிறார்கள்.

8000 டெக்கினிக்கல் சப்போர்ட் பணியாளர்கள், 4600 சைண்டிஸ்ட்டுகள் இதில் பணியாற்றி வருகிறார்கள்.

சாதனை

சாதனை

இந்த மத்திய அறிவியல் மற்றும் நிர்வாக ஆராய்ச்சி துறை தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

38 ஆராய்ச்சி நிறுவனங்கள் இயங்க கூடிய இந்த அமைப்பின் தலைவராக ஒரு பெண் பொறுப்பேற்பது இதுவே முதல்முறையாகும். லித்தியம் அயன் பேட்டரிகளில் இவர் செய்த ஆராய்ச்சிகள் நாடு முழுக்க கவனம் பெற்றது. CSIR-Central Electrochemical Research Institute பிரிவின் காரைக்குடி கிளையில் இவர் இயக்குனராக இருந்த நிலையில் இந்திய முழுக்க மொத்தமாக சிஎஸ்ஐஆர் அமைப்பின் இயக்குனராக இவர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

யார் இவர்

யார் இவர்

இதன் தலைவராக இருந்த சேகர் மண்டேவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் நல்லதம்பி கலைச்செல்விக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் செயலாளர் பொறுப்பையும் இவர் சேர்ந்து வகிக்க உள்ளார். அடுத்த 2 வருடங்களுக்கு இவர் இந்த பொறுப்பில் இருப்பார். சிஎஸ்ஐஆர் அமைப்பில் அடிமட்டத்தில் இருந்து மேலே வந்தவர் நல்லதம்பி கலைச்செல்வி. இந்த அமைப்பில் Central Electrochemical Research Institute (CSIR-CECRI) பிரிவின் தலைவராக 2019ல் இவர் நியமிக்கப்பட்டார்.

பெண் தலைவர்

பெண் தலைவர்

அந்த பிரிவின் முதல் பெண் தலைவர் இவர்தான், அதன்பின் தற்போது மொத்தமாக சிஎஸ்ஐஆர் அமைப்பின் தலைவராகி உள்ளார். இதே அமைப்பில் சாதாரண என்ட்ரி லெவல் ஆராய்ச்சியாளராக பணியை தொடங்கிய இவர் தற்போது மொத்தமாக இந்த அமைப்பின் தலைவராகி உள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த இவர் வறுமையான குடும்ப பின்னணியை கொண்டவர். தமிழ் மீடியத்தில் படித்து வளர்ந்தவர்.

 சாதனை

சாதனை

தமிழ் வழியாக அறிவியலை படித்து அதில் விருப்பம் அதிகமாகி இப்போது மத்திய அரசின் அறிவியல் ஆராய்ச்சி அமைப்பின் தலைவராக உருவெடுத்து இருக்கிறார். இவர் இந்த ஆராய்ச்சி துறையில் 25 வருடங்கள் electrochemical power எனப்படும் மின் வேதியல் துறையில்தான் அதைக் ஆய்வுகளை செய்து இருக்கிறார். முக்கியமாக எலக்ட்ரோடுகள் பற்றி நிறைய ஆய்வுகளை செய்துள்ளார். 125 ஆய்வு கட்டுரைகளை எழுதி உள்ள இவர் தனக்கு கீழ் 6 காப்புரிமைகளை வைத்து உள்ளார்.

English summary
A Tamil Medium Student, CSIR gets its first woman chief, Nallathambi Kalaiselvi to lead. மத்திய அறிவியல் மற்றும் நிர்வாக ஆராய்ச்சி துறை தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X