அண்ணாமலை பொறுப்பிலிருந்த சிக்மகளூரில் சி.டி.ரவி தோல்வி ஏன் தெரியுமா? திருவிழாவாக கொண்டாடும் மஜத
பெங்களூர் : கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வி ஏற்கனவே கருத்துக்கணிப்புகள் மூலம் ஓரளவுக்கு யூகிக்கப்பட்டது தான் என்றாலும், பாஜக பொதுச் செயலாளர் சி.டி.ரவியின் தோல்வி யாரும் எதிர்பார்க்காதது. தீவிர இந்துத்வா முகமான சி.டி.ரவியின் தோல்வி பாஜகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிடி ரவியின் தோல்விக்கு வேறு யாரும் காரணமல்ல, முழுக்க முழுக்க அவரேதானாம்.
கர்நாடகாவில் மாநிலம் தழுவிய அளவில் பாஜகவின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், சி.டி.ரவியின் தோல்விக்கு பிரதான காரணம் அவரது நடவடிக்கை தான் என்கிறார்கள். மாற்றுக் கட்சிகள், மாற்று மதத்தினர் மீதான வெறுப்பு பேச்சே சி.டி.ரவியை பாஜகவின் கோட்டையான சிக்மகளூரிலேயே மண்ணைக் கவ்வச் செய்துள்ளது என்கின்றனர் கர்நாடகத்தினர்.

தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரும், பாஜகவின் தேசிய பொதுச் செயலாளரும், கர்நாடக மாநில முன்னாள் அமைச்சருமான சிடி ரவி கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். 2004 முதல் நடைபெற்ற அத்தனை சட்டமன்றத் தேர்தல்களிலும் சிடி ரவி தான் இங்கு வெற்றி பெற்று வருகிறார்.
கர்நாடகா பாஜகவில் தீவிரமான இந்துத்வ முகமாக அறியப்படும் பி.எல்.சந்தோஷுக்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பவர் சிடி ரவி. ஹார்ட்கோர் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி போலவே இந்துத்வ கருத்துகளை வெளிப்படையாகவே தெரிவித்து வந்தவர். அவரது தோல்வி கர்நாடகா பாஜகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சி.டி.ரவி, தான் 19 ஆண்டுகளாக எம்.எல்.ஏவாக இருக்கும் சிக்மகளூர் தொகுதியிலேயே தோல்வியடைந்துள்ளார். 4 முறை எம்.எல்.ஏவாக செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்த சி.டி.ரவி, எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார். சிடி ரவிக்கு நெருக்கமாகத் திகழ்ந்த தம்மையா என்பவரையே அவரை எதிர்த்து காங்கிரஸ் நிறுத்தி சிடி ரவியை தோற்கடித்துள்ளது.
சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லீம்கள் மீதான வெறுப்பு கருத்துகளைப் பேசி வந்தவர் சிடி ரவி. எதிர்க்கட்சியினர் மீதும் கடுமையான விமர்சனங்களை வைத்தவர். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையாவை சித்ரமுல்லா கான் என்று அழைத்தார். டிகே சிவகுமாரை 1980களில் பெங்களூரில் செல்வாக்கோடு திகழ்ந்த ரௌடி ஒருவரின் சிஷ்யர் என்று விமர்சித்தார்.
மேலும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர்களையும் சிடி ரவி விட்டுவைக்கவில்லை. நான் மட்டும் ஜேடிஎஸ் கட்சியில் இருந்திருந்தால், தேவகவுடாவுக்கு ஜே, குமாரசாமிக்கு ஜே, நிகில் குமாரசாமிக்கு ஜே என்று சொல்லிக்கொண்டு இருந்திருப்பேன். இப்போது நான் பாஜகவில் எம்.ல்.ஏவாகவும், உயர்ந்த பொறுப்புகளிலும் இருக்கிறேன் எனக் கடுமையாகப் பேசினார் சிடி ரவி.
மற்றொரு முறை, தேவகவுடாவிடம், நீங்கள் முஸ்லிமாக பிறந்திருக்க வேண்டியவர் என விமர்சித்தார். இந்தப் பேச்சு தேவகவுடா குடும்பத்தினரை மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் பலரையும், குறிப்பாக வொக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் சிடி ரவியை வீழ்த்தி இதற்கு பதிலடி கொடுத்துள்ளன.
மேலும், எடியூரப்பா கர்நாடகா முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்கப்பட்டதன் பின்னணியிலும் சிடி ரவியின் பங்கு இருப்பதாகப் பேசப்பட்டது. பி.எல்.சந்தோஷின் அறிவுறுத்தலின்படி, எடியூரப்பாவை பதவி விலகச் செய்வதில் சிடி ரவி முக்கிய பங்காற்றியிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்தச் செயலும், சிக்மகளூர் தொகுதியில் உள்ள லிங்காயத் சமூகத்தினர் மத்தியில் அவருக்கு எதிரான அதிருப்தியாக உருவெடுத்தது. தேவகவுடா குடும்பம் பற்றிய பேச்சுக்களால் ஒரு பக்கம் தான் சார்ந்த வொக்கலிகர் சமூகத்தினரிடையே செல்வாக்கை இழந்தது, இன்னொரு பக்கம் லிங்காயத்துகளிடம் செல்வாக்கு இழந்தது என, பேச்சினாலேயே தோல்வியை தழுவிய தலைவர் என்ற அடைமொழிக்கு பாத்திரமாகிவிட்டார் சிடி ரவி.

இஸ்லாமிய வெறுப்பு பேச்சுகளால் முஸ்லீம்களின் வாக்குகளையும், சித்தராமையாவுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களால், அவரை ஆதரித்த குருபா மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும், எடியூரப்பாவுக்கு எதிரான செயல்பாட்டால் லிங்காயத் வாக்காளர்களையும், ஜேடிஎஸ் தலைவர்களின் மீதான கடுமையான விமர்சனங்களால் வொக்கலிகர் சமூக வாக்குகளையும் இழந்தார் சிடி ரவி.
ஆக, மதம் தொடர்பான சிடி ரவியின் பேச்சுகளும், சமூக செல்வாக்கு மிகுந்த தலைவர்களை கேவலமாகப் பேசியதும், 4 முறை எம்.எல்.ஏவான சிடி ரவிக்கு எதிராக இந்தத் தேர்தலில் கடுமையாகச் செயல்பட்டுள்ளன. சிடி ரவி போட்டியிட்ட சிக்மகளூர் தொகுதி மட்டுமின்றி சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளையுமே பாஜக இழந்தது.
தேசிய அளவில் முக்கியமான பாஜக தலைவரான சி.டி.ரவி, தனது கோட்டையாகத் திகழ்ந்த சிக்மகளூரில் மண்ணைக் கவ்வினார். சிடி ரவியின் தோல்வி பாஜகவின் இந்துத்வ அரசியல் அஜெண்டாவுக்கு கிடைத்த அடி என்ற விமர்சனங்களும் தீவிரமாக முன்வைக்கப்படுகின்றன.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பணியாற்றிய பகுதிகளில் ஒன்று சிக்மகளூர். அதோடு, பி.எல்.சந்தோஷ், சி.டி.ரவி இருவருக்கும் மிகவும் நெருக்கமானவர் அண்ணாமலை. பாஜகவின் சிக்மகளூர் படுதோல்வி, சிடி ரவிக்கு மட்டுமல்லாது, பி.எல்.சந்தோஷ், அண்ணாமலை ஆகியோருக்கும் தலைவலியை கொடுத்துள்ளது.
-
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’












Click it and Unblock the Notifications