பெங்களூரில் தனியாக இருக்கும் பெண்கள் தான் டார்க்கெட்.. ‛தண்டுபாளையா' பாணி கொள்ளை.. போலீஸ் அட்வைஸ்
பெங்களூர்: பெங்களூரில் பத்திரிகை கொடுப்பது போல் வீட்டுக்கு வரும் பெண், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. ‛தண்டுபாளையா' கும்பல் ஸ்டைலில் நடக்கும் இந்த கொள்ளை அடுத்தடுத்து 2 இடங்களில் நடந்துள்ளது. பெங்களூரை அதிர வைத்த இந்த சம்பவம் குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.
தண்டுபாளையா.. இந்த பெயரை கேட்டதும் பலரும் அதிர்ந்து போகலாம். ஏனென்றால் தண்டுபாளையா கும்பல் என்பது சாதாரணமானது இல்லை. கொடூரமான ரத்தவெறி கொண்ட கும்பல். பணம், நகைக்காக எந்த எல்லைக்கும் போவார்கள். ஏன் மனிதர்களை துடிதுடிக்க கொடூரமாக பல கொலைகளை செய்துள்ளனர். கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திராவை அதிர வைத்த இந்த ‛தண்டுபாளையா' கும்பல் பெங்களூர் புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகா தண்டுபாளையா கிராமத்தை சேர்ந்தது.

இந்த கும்பல் தனியாக இருப்பவர்களை குறிவைத்து தாக்கி கொள்ளையடிப்பதும், கொலை செய்து கொள்ளையடிப்பது, பெண்களை பலாத்காரம் செய்வது என்று தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்தது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவிலேயே அதிக குற்றங்கள் செய்த டாப் கும்பல்களில் நிச்சயம் ‛தண்டுபாளையா' கும்பலுக்கும் இடம் இருக்கும்.
இந்த கும்பல் தனியாக இருக்கும் வீடு, தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரம் இருக்கும் வீடுகளை குறிவைத்து குற்றங்களை செய்து வந்தது. குறிப்பாக தனியாக இருக்கும் பெண்களை டார்க்கெட் செய்து குற்றங்களை செய்து வந்தது. தனி வீடுகளில் தனியாக இருப்பவர்களிடம் தண்ணீர் கேட்பது
போல் சென்று அவர்களை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்தது.
1996 முதல் 2001 வரை இந்த கும்பல் வெறியாட்டம் ஆடியது. கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திராவில் ஏராளமான குற்றங்களை புரிந்தது. இந்த கும்பலில் ஆண்கள், பெண்கள் என்று மொத்தம் 30 பேர் செயல்பட்டனர். இந்த கும்பலுக்கு 80க்கும் அதிகமான கொலைகள் செய்துள்ளதோடு, 100க்கும் அதிகமான கொள்ளை, 50க்கும் அதிகமான பலாத்கார சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் தற்போது பெங்களூரில் மீண்டும் தண்டுபாளையா கும்பல் டெக்னிக்கல் கொள்ளை சம்பவங்கள் நடக்க தொடங்கி உள்ளது. அப்படி என்ன நடந்தது? பெங்களூரில் வீடுகளில் தனியாக இருப்பவர்கள் ஏன் உஷாராக இருக்க வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
அதாவது பெங்களூர் புறநகர் ஓசூர் மெயின் ரோட்டில் நெரலூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் நாகவேணி. இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பெண் ஒருவர் வீட்டுக்கு வந்தார். தன்னை தூரத்துக்கு சொந்தக்காரர் என்று நாகவேணியிடம், அந்த பெண் அறிமுகம் செய்து கொண்டார்.
மேலும் தனது வீட்டில் திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பத்திரிகை தர வந்திருப்பதாக கூறினார். நாகவேணியும், தூரத்து சொந்தக்காரர் என்ற நம்பிக்கையில் அவரை வீட்டுக்குள் அழைத்து சென்றார். வீட்டுக்குள் நுழைந்த அந்த பெண் குடிக்க தண்ணீர் கேட்டார்.
நாகவேணி தண்ணீர் எடுக்க சென்ற வேளையில் இன்னொரு ஆண் வீட்டுக்குள் நுழைந்தார். அவர் கதவை உள்பக்கமாக பூட்டினார். அதன்பிறகு அந்த ஆணும், பெண்ணும் சேர்ந்து நாகவேணியிடம் கத்தியை காட்டி மிரட்டினர். நகை, பணம் இருக்கும் இடத்தை நாகவேணியிடம் கேட்டறிந்த அந்த 2 பேரும் அவரின் கை, கால்களை கட்டி போட்டனர்.
பீரோ சாவியை எடுத்து அதில் இருந்த 200 கிராம் தங்கம், வெள்ளி பொருட்கள் என்று ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துவிட்டு வீட்டை வெளிப்பக்கத்தில் பூட்டிவிட்டு சென்றனர்.
கை, கால் கட்டப்பட்டதால் நாகவேணியால் உடனடியாக அதில் இருந்து விடுபட முடியவில்லை. இருப்பினும் நாகவேணி சுயமாக முயற்சி செய்து கட்டுகளில் இருந்து விடுபட்டார். அதன்பிறகு அவர் பக்கத்தில் வசிப்பவர்களை அழைத்து வீட்டு கதவை திறக்க வைத்தார். பிறகு நடந்த சம்பவத்தை அவர்களிடமும், கணவர் ரவிக்குமாரிடமும் கூறினார்.
இதுபற்றி நாகவேணி கொடுத்த புகாரில் அத்திப்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக நெரலூரு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
அதேபோல் பெங்களூர் ஆடுகோடியில் 4 பெண்கள் கும்பல் தனியாக இருக்கும் பெண்ணை குறிவைத்து பத்திரிகை கொடுப்பது போல் நடித்து அவரையும் கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்துள்ளது. இப்படி சமீபத்தில் மட்டும் பெங்களூர், பெங்களூர் புறநகர் பகுதியில் பத்திரிகை கொடுப்பதுபோல் 2 சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்த 2 சம்பவங்களும் ‛தண்டுபாளையா' கும்பல் பாணியில் நடந்துள்ளது. இதனால் பெங்களூர் மற்றும் பெங்களூர் புறநகர் பகுதிகளில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தெரியாத நபர்கள் வந்தால் அவர்களை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications