விபச்சாரத்துக்கு பெண் வேணுமா? இதுதான் "கால் கேர்ள்" செல்போன் நம்பர்.. இவரெல்லாம் ஒரு கணவரா? ஆண்டவா?
பெங்களூர்: சைபர் கிரைம் போலீசார், சத்யநாராயணா ரெட்டி என்பவரை வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது பெங்களூருவில்?
சில மாதங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. ஆகாஷ் என்பவருக்கு 2 வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. ஆனால், எந்த வேலைவெட்டிக்கும் போவதில்லை.. இது மனைவிக்கு கவலையை தந்துள்ளது.

ஆகாஷ்: எனவே, வேலைக்கு செல்லுமாறு கணவரை மனைவி அறிவுறுத்தியிருக்கிறார். இது ஆகாஷுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.. உடனே இதையே சாக்காக வைத்து தகராறு செய்து வந்தார்.. மனைவியை வீட்டை விட்டும் துரத்தினார். இதனால் பொறுமை இழந்த மனைவி, ஆகாஷ் மீது போலீஸில் புகார் தந்துள்ளார்.
இந்த புகாரை வாபஸ் வாங்குமாறு ஆகாஷ் கட்டாயப்படுத்தியும், மனைவி புகாரை வாபஸ் பெறவில்லை. இந்த ஆத்திரத்தில் பழிவாங்க வேண்டும் என்பதற்காக, மனைவியின் போட்டோவையும், செல்போன் நம்பரையும், தன்னுடைய நண்பருக்கு அனுப்பி, இவர் ஒரு விபச்சாரி என்றும், உடனே அவரிடம் ஆபாசமாக பேசுமாறும் மெசேஜ் தந்தார்.
போட்டோ: அந்த நண்பரும், ஆகாஷின் மனைவி என்று தெரியாமலேயே மற்ற நண்பர்களுக்கெல்லாம், இந்த போட்டோவையும், போன் நம்பரையும் அனுப்பி ஆபாசமாக பேசுமாறு சொல்லியிருக்கிறார்.
பிறகு, ஆகாஷின் மனைவி, அடிக்கடி போன் வர ஆரம்பித்தது.. அதில் பேசியவர்கள் எல்லாம் ஆபாசமாக பேசியிருக்கிறார்கள். ஆபாசமான வீடியோக்களையும் அனுப்பியிருக்கிறார்கள். இதனால் மன உளைச்சல் அடைந்த பெண் போலீஸில் புகார் தந்தபோதுதான், கணவனே இப்படி மோசமான செயலை செய்தது தெரியவந்தது.
திருமணம்: அதுபோலவே, இப்போதும் ஒரு சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.. இங்கு வசித்து வருபவர் சத்யநாராயண ரெட்டி.. இவருக்கு கடந்த 2019-ல் திருமணம் நடந்துள்ளது. ஆனால், மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நாளுக்கு நாள் அவரை துன்புறுத்தி வந்திருக்கிறார்.
எப்போதுமே மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் டார்ச்சர் தருவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஒருகட்டத்தில் இந்த டார்ச்சர் அதிகமாகவிட்டது. இதனால், அந்த பெண், சத்யநாராயண ரெட்டியை விவாகரத்துசெய்ய முடிவு செய்தார்.
இதனால் இன்னும் ஆத்திரமடைந்த சத்யநாராயண ரெட்டி, "கலாஷாஷி" என்ற ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கி, மனைவியின் செல்போன் நம்பரை பதிவிட்டு, விபச்சாரத்துக்கு கால் கேர்ள் வேணுமா? என்று விளம்பரம் செய்திருந்தார். அத்துடன், மனைவியின் சகோதரி, சகோதரரின் செல்போன் நம்பர்களையும் அதில் பதிவிட்டதாக தெரிகிறது.
தொல்லைகள்: இந்த நம்பரை பார்த்த பலரும், மனைவிக்கு போன் செய்து தொல்லைகளை தர துவங்கினார். அப்போது தான் சத்யநாராயண ரெட்டி செய்த காரியம் இது என்பது குடும்பத்தாருக்கு தெரிந்தது. உடனே நந்தினி லே வுட் போலீசுக்கு சென்று புகார் தந்தனர்.. சைபர் கிரைம் போலீசாரும் வழக்குப் பதிவு விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து போலீஸார் சொல்லும்போது, "மனைவிக்கு சத்யநாராயண ரெட்டி பல்வேறு வகையில் தொல்லை தந்துள்ளார்.. குறிப்பாக, இந்த ஒருவருடமாக டார்ச்சர் அதிகரித்துள்ளது. விபச்சாரத்துக்கு பெண் தேவையா? என்று விளம்பரப்படுத்தவும், அந்த பெண் மிகவும் மனரீதியான பாதிப்புக்கு ஆளாகி உள்ளார்.
எங்கே கணவர்: சத்யநாராயண ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். ஆனால், இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.. இந்தியாவை விட்டு தப்பியிருக்கலாம் என்கிறார்கள்.. எப்படியிருந்தாலும் அவரை கைது செய்துவிடுவோம்" என்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications