பொசுக்குனு "நைட்டியுடன்" தோன்றிய உருவம்.. தெறித்தோடிய பெங்களூர் மக்கள்.. "அது" வேற மிஸ்ஸிங்.. கருமம்
பெங்களூரு: இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது. கர்நாடக போலீசாரும் இது தொடர்பான விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
நம்ம கோவையில் 2 வருடங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.. துடியலூர் அருகே மீனாட்சி கார்டன் குடியிருப்பு பகுதியில், பெண்களின் உள்ளாடைகள் திடீர் திடீரென காணாமல் போய்க் கொண்டிருந்தது. யார் எடுக்கிறார்கள்? எப்போது எடுக்கிறார்கள்? என்பது மட்டும் தெரியாமலேயே இருந்தது.

சுடிதார்: பிறகு, சுடிதார், செருப்புகளும் மாயமாக துவங்கின. பிறகு, திருடிய அந்த உள்ளாடைகள், செருப்புகளை எல்லாம் ஒதுக்குப்புறத்தில் போட்டு தீ வைத்து எரித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கு பிறகு போலீசார் தீவிர வேட்டை நடத்தியதில், ஜல் ஜல்லென்று காலில் கொலுசு மாட்டிக் கொண்டு, நைட்டியுடன் அந்த உருவம் நடமாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. கடைசியில் பார்த்தால், அந்த நபர் ஒரு சைக்கோ திருடன் என்பது தெரியவந்தது.
உள்ளாடைகள்: கடந்த வருடம்கூட, பெங்களூருவில் லாகேரே அருகே இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அங்கிருக்கும் விதான் செளதா லேஅவுட்டில் பெண்களின் உள்ளாடைகள் காணாமல் போக ஆரம்பித்துள்ளது.. மொட்டை மாடிகளில் துணிகளை காயப்போட்டால், எல்லா துணிகளும் இருக்கும்போது, கரெக்ட்டாக உள்ளாடைகள் மட்டும் மிஸ் ஆகிவிடுமாம்.
அதேபோல, ஆளில்லாத வீடுகளிலும் பெண்களின் உள்ளாடைகள், ஜாக்கெட்டுகள் மட்டும் காணாமல் போவதாக புகார்கள் குவிந்து, ராஜகோபால்நகர் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார்கள் சென்றன. இறுதியில், சிசிடிவி கேமராவில் அந்த சபலிஸ்ட் சிக்கினார்..
உள்ளாடைகளை திருடிக்கொண்டு, ரகசியமாக மொட்டை மாடிக்குச்சென்று, உள்ளாடைகளை வைத்து அநாகரீக செயலில் ஈடுபடுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை தந்திருந்தது.
திருட்டு சம்பவம்: இப்போது, இதே பெங்களூருவில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. இவர் சற்று வித்தியாசமானவர்.. வெறும் செருப்புகளை மட்டும் திருடுவாராம்.. எவ்வளவு விலை உயர்ந்த பொருட்கள் வீடுகளில் இருந்தாலும், அதை திரும்பிக்கூட பார்க்க மாட்டாராம். வாசலிலேயே கிடக்கும் விலை உயர்ந்த காலணிகளை மட்டும் திருடிச்சென்றுள்ளார்.
பெங்களூரு நகரில் பல அப்பார்ட்மென்ட் வீடுகளில் இப்படி காஸ்ட்லியான செருப்புகள், ஷூக்கள் காணாமல் போய் கொண்டிருக்கின்றன.. எப்படி இவையெல்லாம் திருடு போகின்றன? என்பது தெரியாமல் குடியிருப்புவாசிகள் குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டனர்.
அதற்கு பிறகுதான், செருப்புகளை மட்டும் திருடும் அந்த நபர் சிக்கினார். ஒரு அப்பார்ட்மென்ட்டில் செருப்பு திருட சென்றபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், இவரது உருவம் பதிவாகியிருந்தது.
சிக்கினார்: அந்த வீடியோவை பார்த்ததுமே, மொத்த பேரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.. காரணம், அந்த திருடன், பெண்களின் நைட்டி அணிந்து கொண்டு வந்தாராம்.. நைட்டியுடன்தான் எல்லா இடங்களுக்கும் சென்று திருடியிருக்கிறார் என்பதும் தெரியவந்தது.
இவர் ஏன் நைட்டி அணிந்தார் என்று தெரியவில்லை? சிசிடிவி கேமராவில் உருவம் தென்படாமல் இருக்க நைட்டி அணிந்து வந்தாரா? அல்லது வித்தியாசமான உடையில் திருடும் விநோத பழக்கம் உடையவரா? அல்லது எப்பவுமே அவர் நைட்டி அணிவாரா? என்றெல்லாம் தெரியவில்லை.
விசாரணை: அந்த வீடியோ ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, குடியிருப்புவாசிகள் போலீசாரிடம் சென்றிருக்கிறார்கள். இனிமேல்தான், நைட் நேரத்தில் நடமாடிய அந்த நைட்டி மேன் யாரென்று தெரியவரும்..!!
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications